நோன்பு காலத்தில் உண்ணக் கூடிய விதை.. வெயிட் லாஸுக்கு சூப்பர் மருந்து.. இதயத்தை பாதுகாக்கும் சீட்!
சென்னை: எடையை குறைக்க விரும்புகிறீர்களா அப்படியென்றால் தாமரை விதைகளை உணவு பொருட்களில் சேர்த்து கொள்ளுங்கள்.
தாமரை விதைகள் என்பது அனைத்து தரப்பினரும் உண்ணக் கூடிய ஒரு பொருள். இதன் பயன்பாடுகள் தெரியாமல் சிலர் மட்டுமே இதை பயன்படுத்தாமல் இருப்பர். இது விரதம் இருக்கும் நாட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றால் இதன் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இதை ஸ்னாக்ஸ் போலும் சாப்பிடலாம். இதை ஏன் விரதங்களின் போது சாப்பிடுகிறார்கள் தெரியுமா. இதில் அதிக அளவிலான ஆற்றல் உள்ளது. இதனால் இதை விரதத்தின் போது சாப்பிட்டால் விரதம் இருப்பவர்கள் தெம்பாக இருப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் எடை குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த தாமரை விதைகளில் நிறைய நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இது நீண்ட நேரம் பசியை தூண்டாது. இதனால் அதிக கலோரிகளை உட்கொள்வதிலிருந்து நம்மை பாதுகாக்கும். இதை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.
இல்லாவிட்டால் உப்பு, மிளகு தூள் சேர்த்து சாலட் போலும் சாப்பிடலாம். இதையே காலை சிற்றுண்டியாகவும் உட்கொள்ளலாம். அதில் பிளேவனாய்டு எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதோடு சருமத்தையும் பாதுகாக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
கால்சியம் அதிகம் இருக்கிறது. இதனால் எலும்பு, பற்களை பாதுகாக்கிறது. வெறும் 100 கிராம் தாமரை விதைகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு உள்ளிட்டவை இருக்கின்றன. வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். இது உடலை மட்டுமல்லாமல் மனதையும் பாதுகாக்கிறது. மனசோர்வு, மன அழுத்தத்தை குறைக்கிறது.

இதை உடற்பயிற்சி செய்வோர் சாப்பிடலாம். புதிய எனர்ஜியை கொடுக்கும். அல்சைமர் நோய் எனப்படும் நினைவாற்றல் இழப்பை ஏற்படுவதைத் தடுக்கிறது இந்த தாமரை விதைகள். நரம்பு செல் சேதத்தை குறைக்கவும் செல் சேதத்தை குறைக்கவும் புரோந்தோசயடின்கள் எனப்படும் மூளை முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை குறைக்கவும் இது உதவுகிறது.
இவற்றை எப்படி சமைப்பது என்பதை பார்ப்போம். மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உலர்ந்த தாமரை விதைகள் கிடைக்கின்றன. அவற்றை தண்ணீரில் ஊற வைத்து சூப்புகள், சாலட்டுகள் செய்து சாப்பிடலாம். உலர்ந்த தாமரை விதைகளை பாப்கார்னை போல் வறுத்து சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications