முரல் மீன்.. கடகடன்னு வெயிட் குறைய இந்த 5 மீன்கள் போதுமே.. தவிர்க்க வேண்டிய 5 மீன்கள் என்ன தெரியுமா
சென்னை: எல்லா வகையான மீன்களும் ஒவ்வொரு வகையில் நன்மைகளை தரக்கூடியது என்றாலும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சிலவகை மீன்களை மிஸ் செய்யக்கூடாது. அவைகள் என்னென்ன?
அசைவ உணவுகளிலேயே கடல் உணவுகளில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன. அதனால்தான் உணவில் அவைகளை தவிர்க்க கூடாது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அதிக மசாலாக்கள் சேர்க்காமல், அதிக எண்ணெய்யும் சேர்க்காமல், குட்டி குட்டி மீன்களை, குழம்பு வைத்து சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள்.

உடல்எடை: உடல் எடையை குறைப்பவர்களும் இதுபோலவே மீன்களை சமைத்து சாப்பிட்டால் ஓரளவு பலன்கள் கிடைக்கும்.. முக்கியமாக 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்களுக்கு உடல் எடை குறைந்திருக்கிறதாம். இதற்கெல்லாம் காரணம், சாச்சுரேடட் கொழுப்பு இந்த மீன்களில் நிரம்பியிருப்பதால், உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது.
அந்தவகையில், கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன், சாளை மீன், சங்கரா மீன், நெத்திலி, சூரை மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.. இந்த மீன்களில் எல்லாம் முட்கள் அதிகம் என்பதால், இவைகளை தவிர்த்துவிடுவார்கள். ஆனால், முட்கள் நிறைந்த இந்த மீனில்தான், நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளதாம். குழம்பு வைக்கும்போது, இந்த மீனிலுள்ள எலும்புகளையும் சேர்த்தே சாப்பிட்டால் கால்சியம் அதிகமாக கிடைக்கும.
கானாங்கெளுத்தி : உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெய் இந்த 3 பொருட்களை மட்டுமே சேர்த்து மீனை வேகவைத்தோ அல்லது மேரனேட் செய்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது நெருப்பில் சுட்டோ சாப்பிட்டால் போதும்.. சங்கரா மீனில் குறைந்த அளவிலான கலோரிகளும் அதிக அளவு புரதமும் உள்ளதால், இந்த சங்கரா மீனின் தலையை மட்டுமே வைத்து, சூப், ரசம் போல செய்து சாப்பிடலாம்.
இதில் முரல் மீன்களையும் சேர்த்து கொள்ளலாம்.. அரிதாக கிடைக்கும் இந்த மீன்கள், பார்ப்பதற்கு கிட்டத்தட்ட பாம்பு போலவும் காணப்படும், கடல் குதிரை போலவும் காணப்படம்.. குறுகிய நீண்ட தாடை, குறுகிய மூக்கு, கூரான பற்கள், கத்தி போன்ற மூக்கு காணப்படும்.
எடை குறைப்பு: இந்த மீனின் மேல்புறமும், எலும்புகளும் பச்சை கலரில் இருப்பதால், பெரும்பாலானோர் சாப்பிடுவதில்லை. ஆனால், வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன் இந்த முரல் மீன்களாகும். உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் மட்டுமல்ல, இருதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் இந்த மீனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மீன்கள் நல்லவை என்றாலும், ஒரு சில மீன்களை அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது. அந்த மீன்கள் என்னென்ன மீன்கள் தெரியுமா? கானாங்கெளுத்தி மீனில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் உடலுக்கு நல்லது தான்.. ஆனாலும், இதில் நிறைய பாதரசம் உள்ளதால், உடலுக்கு தீங்கை தந்துவிடக்கூடும்.
விலாங்கு மீன்: விலாங்கு மீனில், அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மைக் கொண்டவை..
அதேபோல வாளை மீன்களிலும் நிறைய பாதரசம் உள்ளது.. அதாவது, ஒரு வாளை மீனில் 976 ppm (Parts per million) பாதரசம் உள்ளதால், அதிகம் சாப்பிடக்கூடாது. நிறைய வாளை மீன் சாப்பிட்டால், மூளையின் செல்களை சேதமடைய செய்துவிடுவதாம். வாளை மீனுக்கு அடுத்ததாக அதிகளவு பாதரசம் அளவு கொண்டுள்ள மீன் சூரை மீன்களாகும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications