சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?
சென்னை: நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்கள் வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற எண்ணெய் எது தெரியுமா?
பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யை, ஆரோக்கியமான சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.. அதேபோல, டைப் 2 நீரிழிவு நோயை குறைப்பதில் இந்த எண்ணெய் உதவுவதாக சொல்கிறார்கள். மேலும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.
சூரியகாந்தி எண்ணெய்: சூரியகாந்தி எண்ணெய்யும், உடலில் ரத்த குளுக்கோஸை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, உடலிலுள்ள கொழுப்பை குறைக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.. இன்சுலின் அளவையும் கொழுப்பின் அளவையும் மேம்படுத்தி, நீரிழிவு நோயை ஏற்படுத்த காரணமாக இருக்கும், வளர்சிதை மாற்ற நோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதாக கூறுகிறார்கள்.

ஆளிவிதை எண்ணெய்யை பொறுத்தவரை, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற எண்ணெய்யாக கருதப்படுகிறது.. இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க முடியும்...
வால்நட் எண்ணெய்: அதுபோலவே, வால்நட் எண்ணெய் டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறதாம்.. ஆல்பா-லினோலெனிக் அமிலம் அதிகமுள்ளதால், இந்த எண்ணெயும் நீரிழிவு நோயாளிகளுக்கேற்றதாக கருதப்படுகிறது.
நல்லெண்ணெய்யை பொறுத்தவரை, சீசேமோல் என்ற பொருள் நிறைய உள்ளது.. இந்த பொருள் இதயத்திற்கு மிகவும் நல்லது. உடல் இயக்கத்துக்கு இந்த எண்ணெய் உதவுகிறது.. வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசமமாக வைக்க நல்லெண்ணெய் உதவுகிறது.. நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கக்கூடியது.. அத்துடன், உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கக்கூடியது..
நல்லெண்ணெய்: லெசித்தின் என்ற பொருளும், லினோலிக் என்ற அமிலமும் இதிலுள்ளதால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஆனால், நல்லெண்ணெய்யை உணவில் சேர்க்கும்போது, இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை எல்லாம் நிறைய சேர்த்துக்கொண்டால் கூடுதல் நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் மற்றொரு எண்ணெய் நிலக்கடலை அல்லது கடலை எண்ணெய் ஆகும்... பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.. ஆலிவ் எண்ணெய் இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
2 எண்ணெய்: ஆனால், சர்க்கரை நோயாளிகள் பனை எண்ணெய் பயன்படுத்துவது நல்லதல்ல என்கிறார்கள்.. சர்க்கரை இன்னும் அதிகமாகிவிடுமாம்.. அந்தவகையில், பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் இவர்களுக்கு ஏற்றது. எனினும், நீரிழிவு நோயாளிகள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, சமையல் எண்ணெய்யை பயன்டுத்துவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications