Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமாயில் வாங்கறீங்களா.. அதைவிடுங்க.. சமையலுக்கு நன்மை தரும் எண்ணெய் இதுதானாம்.. இவ்ளோ விஷயம் இருக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலவித எண்ணெய் இருந்தாலும், சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது என்பதில் குழப்பமே மிஞ்சிவிடுகிறது.. அந்தவகையில், ஒருசில எண்ணெய்களை பற்றி பார்ப்போம்.

உடல் எடை குறைப்பதற்காக, தற்போது பலரும் உபயோகிப்பது ஆலிவ் எண்ணெய்.. இந்த எண்ணெயில் பாலிஃபினால் இருப்பதால் புற்றுநோய் மற்றும் இருதய நோய்களின் அபாயம் தடுக்கப்படுகிறது.

Do you know the Health Benefits of Palm Oil and Which is the best oil for regular cooking

கடலை எண்ணெய்: வேர்க்கடலை செடியின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுதுதான் கடலை எண்ணெய்.. சமீபத்தில் நடந்த அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டிருந்த கருத்தில், இதயத்திற்கு இந்த கடலை எண்ணெய் நன்மை செய்வதாக கூறியிருந்தது. அதாவது, இதய நோய் அபாயத்தை 30 சதவிகிதம் இந்த கடலை எண்ணெய் குறைக்கிறதாம்.

கடலை எண்ணையில் மோனோசாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் தீங்கில்லாத கொழுப்பு நிறைந்திருப்பதால், சீரான ரத்த ஓட்டத்தை செயல்படுத்த உதவுகிறது.. அத்துடன், நரம்புகள், ரத்த நாளங்களில் அடைப்புகள் எதுவும் ஏற்படாதவாறு, அவைகளை சிறப்பாக செயல்பட வைத்து பராமரிக்கிறது.. ரத்த அழுத்தம் பிரச்சனைகளையும் இந்த கடலை எண்ணெய் தடுக்கிறது.

கலோரிகள்: எனினும், 1 ஸ்பூன் கடலை எண்ணெயில், 120 கலோரிகள் இருப்பதால், 2 ஸ்பூன்களுக்கு மேல் இதில் சமைக்கக்கூடாது என்கிறார்கள்.. நேரடியாக 1 ஸ்பூன்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்யே நல்லது.. . ஒரு ஸ்பூன் கடலை எண்ணெயில் வைட்டமின் E மட்டும் 11 சதவீதம் இருப்பதால், சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளன.. இதிலுள்ள கொழுப்பு மூலக்கூறுகள், கல்லீரலுக்கு செல்வதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. செரிமானமும் சீராகி, உடலில் மெட்டபாலிசமும் அதிகரிக்கும். வெஜிடபிள் ஆயிலை குறைவாக பயன்படுத்தலாம், இதய நோயாளிகள் தவிர்த்தே விடலாம்.

சூரியகாந்தி எண்ணெய்: சூரிய காந்தி எண்ணெய்யில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.. உடல் எடையை அதிகரிக்க செய்வதுடன், சில நச்சுப்பொருள்களை உடலில் உற்பத்தி செய்கிறதாம்.

பாமாயிலை எடுத்து கொண்டால், பீட்டா கரோட்டின் நிறைய உள்ளது.. இந்த பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. இதிலுள்ள வைட்டமின் A, கண்பார்வையை மேம்படுத்துகிறது.. கண் குறைபாடுகளை போக்குகிறது.. ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் பாமாயிலை பயன்படுத்தலாம். மிகச்சிறந்த ஆன்டி ஆன்ஸிடண்ட் என்றாலும், அதிகமான கொழுப்பு உள்ளதால், உடல் எடை அதிகரிப்பு, இதயநோய், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்கலாம்.

நல்லெண்ணெயில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்புகள் நிறைந்திருப்பதால், சமையல் செய்வதற்கு உகந்த எண்ணெய்யில் இது முக்கியமானதாக உள்ளது..

எண்ணெய்கள்: ஒவ்வொரு எண்ணெய்யிலும் ஒவ்வொரு பண்புகள் இருந்தாலும், எண்ணெய் பொருட்கள் அதிகம் சாப்பிட்டால் இதய நோய்களுக்கான ஆபத்து அதிகமாகிறது.. எனவே, 2 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய்களை கலந்து சமைத்து சாப்பிட்டால், இதய நோய் அபாயம் குறைவதாக சொடல்கிறார்கள். குறிப்பாக, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்டராலின் அளவை அதிகரிக்க செய்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+