உயிருக்கே உலை வைக்கும் டெங்கு காய்ச்சல்..சர்ரென குறையும் பிளேட்லெட்.. ஜம்மென எகிற வைக்க இதோ ஒரு வழி
சென்னை: பப்பாளி இலை சாற்றின் பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். டெங்கு காய்ச்சலுக்கு பிறகு இந்த இலை அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. டெங்கு மட்டுமில்லை இது இன்ன பிற நோய்களையும் குணப்படுத்துகிறது.
பப்பாளி பழம் உடலுக்கு நல்லது என்பார்கள். இது சிறுநீர் பையில் உருவாகும் கல்லை கரைக்கும். நரம்புகள் பலம் பெறும். ரத்த விருத்தி உண்டாகும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதில் விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு நன்மை செய்யும்.

இதுவரை பப்பாளி பழத்தின் நலன்களை மட்டுமே தெரிந்திருப்பீர்கள். தற்போது பப்பாளி இலை சாறு பிரபலமடைந்து வருகிறது. ஏற்கெனவே சித்தர்கள் இந்த மூலிகைகள் குறித்து குறிப்புகளை கூறியிருந்தாலும் அதன் பலன் டெங்கு காய்ச்சல் காலத்தில்தான் தெரிகிறது.
இந்த பப்பாளி இலை சாறு நய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த சாறு சரும ஒவ்வாமைகளுக்கு பயன்படுகிறது. இந்த இலையில் விட்டமின் பி, விட்டன் சி, ஏ, ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த இலைகளில் சபோனின்கள், டானின்கள், ஆல்கலாய்டுகள் உள்ளன. அகு போல் பீட்டா கரோட்டின் போன்ற ரசாயனமும் உள்ளது.
இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். உயிருக்கே உலை வைக்கும் டெங்கு வைரஸால் பிளேட்லெட் அளவு குறையும். இந்த நோயால் அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி, நடுக்கம், கண் வலி போன்றவை ஏற்படும். நாளொன்றுக்கு 25 மில்லி பப்பாளி இலை சாறு தண்ணீரில் கலந்து குடிப்பது உடலில் பிளேட்லெட் அளவை அதிகரிக்கும்.
மலேரியா காய்ச்சலின் வீரியத்தையும் பப்பாளி இலை குறைக்கிறது. மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களுக்கும் பப்பாளி இலை சாறு நன்மையை கொடுக்கும். பப்பாளி இலையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் வலி குடல் இயக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளையும் தீர்க்கும். கல்லீரல் அழற்சி நோய், உடல் பருமனுக்கும் இந்த இலை தீர்வு கொடுக்கிறது. கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.
பப்பாளி இலை சாறு பொடுகை நீக்கும். உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதத்தையும் எண்ணெய்யையும் சமன் செய்யும். இதனால் கூந்தலில் வறட்சி ஏற்படாது, பூஞ்சை தொற்றும் ஏற்படாது. இந்த இலையின் சாற்றை கூந்தலில் தடவி வந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications