ரத்த அழுத்தத்தை குறைக்கும் செவ்வாழை.. இத்தனை நன்மைகளா? சிவப்பு நிறத்திற்கு காரணம் என்ன?
சென்னை: முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் எத்தனை வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சுவையிலும் மருத்துவ குணத்திலும் மாறுபடும். அந்த வகையில் செவ்வாழையை கேள்விப்பட்டுள்ளீர்களா?
வாழை மரம் வளர்த்தால் வாழை இலை, வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம் உள்ளிட்டவை கிடைக்கும். அது போல் வாழை மரம் வெட்ட வெட்ட தழைக்கும் என்பதால் அதை திருமண வீடுகள் உள்ளிட்ட விசேஷங்களுக்கு வாசலில் கட்டுவது வழக்கம்.

அப்படிப்பட்ட வாழை மரங்கள் நிறைய வகையான வாழைப்பழங்களை கொடுக்கின்றன. மஞ்சள் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், கற்பூரவள்ளி, பூவன், ரஸ்தாளி, எலக்கி பழம், செவ்வாழை, நேந்திரம் பழம் உள்ளிட்ட பழங்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை தரும். இவற்றில் செவ்வாழை குறித்து பார்ப்போம். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் வாழைப்பழங்களில் சிகப்பு நிறத்தில் இருக்கும். இந்த வாழை பழத்தின் சுவை அற்புதமாக இருக்கும். இதில் பொட்டாசியம், விட்டமின் சி, விட்டமின் பி6, நார்ச்சத்து உள்ளது. இதில் நிறைய நீர் சத்தும் உள்ளது. பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் செவ்வாழைக்கு அதிக பங்கிருக்கிறது.
அதுபோல் இந்த செவ்வாழையில் கரோட்டினாய்டுகள் உள்ளன. இதுதான் அந்த பழத்தின் தோலுக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. மேலும் இந்த வாழைப்பழத்தில் லூட்டின் மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் உள்ளதால் கண் பார்வையை பார்த்துக் கொள்கிறது. வயதானால் பார்வை திறன் மங்குவதில் இருந்து தடுக்கிறது.

அது போல் இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த பழம் இதய நோயை கட்டுப்படுத்தும். இந்த பழத்தில் விட்டமின்கள் சி, பி6 அதிகம் உள்ளதால் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெள்ளை அணுக்களையும் இம்யூன்பாடிகளையும் பாதுகாக்கும். இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஜீரண சக்தி மேம்படும். இதில் உள்ள ப்ரீபயாடிக்ஸ் வயிறு உப்புசத்தை குறைக்கிறது. குறிப்பாக மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த பழங்கள் மிகவும் சுவையை கொடுப்பதாக உள்ளன.
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு இந்த பழத்தை தினமும் ஒன்று கொடுக்கலாம். எடையை குறைக்க நினைப்போரும் இந்த பழத்தை சாப்பிடலாம். இந்த பழம் சிறுநீரக கற்கள், புற்றுநோய் உண்டாவதை தடுக்கும். ரத்த சோகை, ரத்த குறைபாடு போன்றவை பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications