சுரக்கும் காய் சுரைக்காய்! பென்சிலில் கோடு போட்ட மாதிரி உடம்பு வேண்டுமா? ஜூஸாக போட்டு குடிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு அரை கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் அப்படியே பென்சிலில் கோடு போட்டாற் போல் ஒல்லியாகிவிடுவீர்கள்.

நீர்க் காய்களை உண்பது நல்லது என நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துத் தந்த பாடமாகும். ஆனால் நாக்கு சுவைக்காக நாம் ஆரோக்கியமான உணவுகளை விட்டுவிட்டு கிழங்கு வகையான காய்களையே உட்கொள்கிறோம். இதனால் மூட்டு வலி, கை,கால் வலிகள் வந்ததுதான் மிச்சம்.

Do you know the health benefits of Suraikkai (bottle gouard)?

நீர் காய்களை கோடை காலத்தில் சாப்பிட்டால் விரைவில் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். உடலுக்கும் குளிர்ச்சியான சூழலை கொடுக்கும். பூசணிக்காய், சுரைக்காய், சௌ சௌ, முள்ளங்கி உள்ளிட்டவை நீர் காய்கள் ஆகும். இவற்றில் சுரைக்காயில் 85 சதவீதம் அளவுக்கு நீர் உள்ளது. இதில் விட்டமின் சியும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் கார்போஹைட்ரேட், விட்டமின்கள், தாதுக்கள், உள்ளிட்டவை உள்ளன. சுரைக்காயில் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கும். வயிற்று போக்கை போக்கும். உடல் வலியை தணிக்கும் தன்மை சுரைக்காய்க்கு உண்டு. வலிப்பு நோய்க்கு சுரைக்காய் அருமருந்தாகும். ரத்த நாள நோய் சிகிச்சைக்கும் இந்த சுரைக்காய் பயன்படுகிறது.

சுரைக்காயை தினமும் ஜூஸாக குடித்து வந்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். ரத்த கொதிப்பை போக்கும். செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும். இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடலில் கெட்ட கொழுப்புகளை அண்ட விடாது. புற்றுநோய்க்கு அருமருந்தாக இந்த சுரைக்காய் இருக்கிறது. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழித்து விடும்.

இந்த சுரைக்காய் அஜீரணத்தை தவிர்க்கிறது. இதில் 85 சதவீத தண்ணீர் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உடல் எடை குறைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கும். சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் இந்த சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். தலைவலியை போக்கும்.

மனித உடலில் தேவையற்ற கழிவுகளை வியர்வை, சிறுநீர் வழியாக சுரைக்காய் வெளியேற்றும். மஞ்சள் காமாலை நோய்க்கு சுரைக்காய் இலைகலை பயன்படுத்தலாம். நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் இந்த சுரைக்காய். உடல் எடை குறைக்க வேண்டுமென்றால் எலுமிச்சை, மிளகு, இஞ்சி , உப்பு போட்டு குடித்து சுரைக்காய் ஜூஸ் குடித்து வரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+