தலை முதல் கர்ப்பப்பை வரை நன்மையை தரும் Wood Apple! ஆனா ஓடை மட்டும் ஆண்கள் அரைத்து சாப்பிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட நெடிய மருத்துவ குணம் கொண்ட விளாம்பழத்தை சாப்பிட்டிருக்கிறீர்களா, இதன் மருத்துவ குணங்கள் என்ன என தெரியுமா?

பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு, சத்தான உணவு, போதிய உடற்பயிற்சி இருந்தாலே போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது போன்ற பழங்களுக்கும் காய்களுக்கும் இயற்கையிலேயே பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

Do you know the health benefits of Vilampazham?

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது விளாம்பழம். இதை ஆங்கிலத்தில் Wood Apple அல்லது Stone fruit என்பார்கள். இந்த பழம் எல்லா காலங்களில் கிடைக்காது. இது ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பழமாகும்.

இதன் மேல் ஓடு போன்று இருக்கும். அதை உடைத்தால் அதில் ஒரு பல்ப் (pulp)இருக்கும். அந்த சதை பகுதியான பல்ப்பை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா. அதை சிறிது வெள்ளத்தை பொடித்து நன்கு கைகளால் பிசைந்தால் பஞ்சாமிர்த பதத்திற்கு வரும். அதை அப்படியே ஸ்பூனாலோ அல்லது கைகளாலோ சாப்பிட்டால் பஞ்சாமிர்தம் திடீரென தேவாமிர்தமாக மாறிவிடும்.

இது புளிப்பு சுவையுடையது. அதனால் அதை ஈடுகட்ட வெள்ளத்தூள் சேர்க்கிறோம். இது புளிப்பு சுவை கொண்டது என்பதால் இது சீதளம், குளிர்ச்சி என கருதி பலர் தவிர்க்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனையாகும் இந்த பழத்தை வாங்கி விநாயகருக்கு படைத்துவிட்டு குப்பையோடு குப்பையாக வீசி விடுகிறார்கள். ஆனால் இதில் எத்தனை மகத்துவம் இருக்கிறது தெரியுமா.

இது பசியை தூண்டக் கூடியது. ரத்தத்தை சுரக்கும் தன்மை கொண்டது. வாந்தியை கட்டுப்படுத்தும், மலத்தை இறுக்கும், பித்தத்தை நீக்கிவிடும். இதனால் ஏற்படும் தலைச்சுற்றலை போக்கிவிடும். முக்கியமாக கோழையை அகற்றிவிடும். வாய்ப்புண், ஈறு பிரச்சினைக்கு நல்லது. இருமல், சளியை எடுக்கும். வெள்ளைப்படுதலை நீக்கும், மாதவிடாய் அதிக ரத்த போக்கை கட்டுப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு, சீதபேதியை நிறுத்தும். ஆனால் இதன் ஓட்டை மட்டும் தூளாக்கி அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து ஆண்கள் 21 நாட்கள் சாப்பிட்டால் விந்தணுக்கள் நீர்த்து போய் பெண் மீதான ஆசையே போய்விடும். குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த பழத்தை கொடுத்தால் உள்ளுறுப்புகளில் புண் ஏதேனும் இருந்தாலும் அது ஆறிவிடும். ஆஸ்துமா, அலர்ஜிக்கு அருமருந்தாக அமைகிறது. இனி இந்த பழத்தை எடுத்து தூர எறியாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+