குடலிறக்கம்.. ஆயுள்கூட்டும் அற்புத கொடி.. ஹெர்னியாவை விரட்டும் சூப்பர் டிப்ஸ்.. அட்டகாசமான அதிமதுரம்
சென்னை: ஹெர்னியா என்ற குடலிறக்கம் மிக மோசமானது.. இதற்கு உரிய சிகிச்சை தராவிட்டால், பெரும் சிக்கலாகிவிடும்.. இந்த ஹெர்னியா எதற்காக உண்டாகிறது? இந்த ஹெர்னியா வலியை போக்க, வீட்டு மருத்துவம் கை கொடுக்குமா?
குடலிறக்கம் என்பது உடலில் பலவீனமான இடத்தின் வழியாக, வீங்கிய உறுப்பு அல்லது கொழுப்பு திசு என்கிறார்கள்.. உடலுழைப்பு, உடற்பயிற்சி போன்றவை இல்லாமல் இருப்போருக்கும், சில நேரங்களில் அதிக எடை தூக்குவோரும், ஆபரேஷன் மேற்கொண்டவருக்கும் குடலிறக்கம் என்ற ஹெர்னியா ஏற்பட வாய்ப்புள்ளது.

மன அழுத்தம்: மன அழுத்தம், அல்லது பதட்டம் அதிகமாக இருந்தால், ஹார்மோன்கள் உடலின் உறுப்புகளை பலவீனப்படுத்தலாம்.. இதன் காரணமாகவும் ஹெர்னியா பிரச்சனை வரலாம்..
குடலிறக்கம் வலி குறைய வேண்டுமானால், இந்த வலியை குறைக்க வேண்டுமானால், முதலில் அதிக காரமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.. அமில உணவுகள், கடினமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற உணவுகளால், வயிற்றுப்புறணி இன்னும் அதிகமாக வீக்கமாகிவிடலாம்.
இஞ்சி டீ: எனவே, இவைகளுக்கு பதிலாக, சமையலில் நிறைய இஞ்சி, மிளகு இரண்டையும் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.. தினமும் 2 வேளை இஞ்சி டீ தயாரித்து குடிக்கலாம்.. மிளகில் ரசம் வைத்து சாப்பிடலாம்.. இவை இரண்டுமே குடலிறக்கம் மூலம் ஏற்பட்ட வலியை குறைக்க உதவுகின்றன.. வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கின்றன.
சித்த மருத்துவத்தில், பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ள அதிமதுரம், இந்த குடலிறக்க வலிகளுக்கு நிவாரணமாகிறதாம்.. வயிற்றுப்புறணி, உணவுக்குழாய் பகுதிகளில் ஏற்படும் சேதங்களை, அதிமதுரம் வேர்கள் தவிர்ப்பதுடன், குணப்படுத்தவும் உதவுகிறது. எனவே, இந்த அதிமதுர பொடியை, பாலில் கலந்து வாரம் 2 முறை குடித்துவந்தாலே குடலிறக்கம் கட்டுப்படும் என்கிறார்கள். அல்லது மிகச்சிறந்த வலி நிவாரணியான அதிமதுர பவுடரில், டீ தயாரித்து சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ்: காலை நேரத்தில் கற்றாழை ஜூஸ் குடித்து வரலாம்.. கடினமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். கேரட், கீரை, வெங்காயம், புரக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை சேர்த்து சூப் போல தயாரித்து, லேசாக உப்பு சேர்த்து குடிக்கலாம்.. இந்த காய்களின் அடர்த்தியான ஊட்டச்சத்துக்களும், அழற்சி எதிர்ப்பு தன்மைகளும், குடலிறக்கத்தின் வலியை குறைக்க உதவுகின்றன..
அதேபோல, இடுப்பில் அணியக்கூடிய அரைஞாண் கயிறு குறித்து இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நாம் இருப்பது வெப்ப மண்டல நாடு.. அதிக வெப்பம் நம்மை நேரடியாகவே தாக்கும் என்பதால்தான், பிறக்கும் குழந்தைகளுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் நம்மிடம் இன்றும் உள்ளது.. கறுப்பு வெப்பத்தை உறிஞ்சி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என்பதால், சிவப்பு நிற அரைஞாண் கயிறு கட்டுவது மிகவும் சிறந்தது
ரத்தக்குழாய்கள்: ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான்... இந்த அரைஞாண் கயிற்றை, இடுப்பை சுற்றி கட்டும்போது, மேல்வயிற்று பகுதியிலுள்ள குடல் கீழே இறங்காமல் இருக்குமாம்..
அந்த காலத்தில் மரம் ஏறுவது, குதிப்பது, மலைகளில் ஏறுவது, இப்படி எந்த வேலைகளை செய்தாலும், விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம்.. எனவே, விதைப் பையை பாதுகாக்கவும், வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும், இந்த அரைஞாண்கயிறுகளை கட்டி வந்திருக்கிறார்கள்..
சிறுநீர்ப்பை: இதனால், சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இப்படி இடுப்பில் கட்டுவதால் ஆண்மை கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது.. சிறுநீரக பிரச்சைகளையும் ஏற்படாமல் தடுக்கிறது என்பதுடன், உள்ளுறுப்புகளை பாதுகாப்பதற்கு கவசமாக இருப்பதே இந்த அரைஞாண் கயிறுதான்.. இதை எப்போதும் இடுப்பில் கட்டி இருப்பதால், ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் வெகு விரைவாக வராது என்று முன்னோர்கள் அன்றே கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications