மீனில் ஸ்பெஷலே இதுதான்.. அடிக்கடி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் ஆச்சரியம்! கண்டபடி நன்மை தரும் மீன்கள்
சென்னை: கடல் உணவுகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால்தான், அதை உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.. அந்தவகையில், மீன்களை சாப்பிடும்போது கிடைக்கும் மருத்துவ பலன்கள் என்னென்ன தெரியுமா?
மீன்களை சாப்பிட வேண்டுமானால், கடல் மீன்களுக்கே அதிக முக்கியத்துவம் தர சொல்கிறார்கள்.. குறிப்பாக, கடலிலுள்ள குட்டி குட்டி மீன்களை சாப்பிட வேண்டுமாமாம்.

சத்துக்கள்: ஏனென்றால், இந்த மீன்களில் ஏகப்பட்ட கால்சியம் நிறைந்துள்ளன. நிறைய தாதுக்களும், வைட்டமின் A, D, அயோடின் போன்ற சத்துக்களும், இந்த சின்ன சின்ன மீன்களில் அடங்கியிருக்கின்றன. இந்த சத்துக்கள் எல்லாமே மனிதனுக்கு நினைவாற்றலை வளப்படுத்தக்கூடியவை.
அதுமட்டுமல்ல, குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இந்த மீன்களில் உள்ளதால்தான், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் இந்த சிறிய வகை மீன்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்கிறார்கள். இந்த குட்டிவகையான மீன்களை சாப்பிடும்போது, இதய நோய்கள் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றனவாம். ரத்தத்தில் கொழுப்பின் அளவும் வெகுவாக குறைந்து, ரத்த அழுத்தத்தை சமன்செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆழ்க்கடல் மீன்கள்: மூட்டு நோய்கள், சொரியாசிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இந்த சிறியரக மீன்களுக்கு இருக்கிறது. அதேபோல, ஆழ்கடலில் பிடிக்கப்படும் பெரிய மீன்களையும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏனென்றால், ஆழ்கடல் மீன்களில், நிறைய ரசாயன பொருட்கள் நிறைந்திருக்குமாம்.
கடல் மீன்கள் உப்பு நீரில் வளர்வதால், சோடியத்தின் அளவும் அதிகமாக இருப்பதால் அதை தவிர்க்க கூடாது. அதேபோல கடல் மீன்களில் கால்சியமும் அதிகம்.. இது அத்தனையும் மனித ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்களாகும்.
ஆற்று மீன்கள்: அதற்கு ஆற்று மீன்களில் சத்துக்கள் இல்லை என்று அர்த்தமில்லை.. இரண்டிலுமே சத்துக்கள் இருக்கின்றன.. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.. ஆற்று மீன்களும், ஏரி மீன்களும், புழு, பூச்சிகளை உணவாக சாப்பிட்டு வளரும். கடல் மீன்களோ, கடலில் வளரும் கடல்பாசிகளையே சாப்பிட்டு வளருகின்றன. அதனால்தான், இந்த வகை மீன்களில் ஒமேகா-3 போன்ற உயர்ந்த சத்துகள் அதிகமாக உள்ளன.
இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள பேருதவி புரிகிறது.. இந்த கொழுப்பு அமிலங்கள்தான், இதயம், மூளை, கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும்போது, மன அழுத்தம், மன இறுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறது. அவ்வளவு ஏன்? கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 சேர்க்கப்படுகிறது.
மீன் நல்லது: எனவே, மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடுகள் வராது.. தைராய்டு பிரச்சனைகள் தீரும்.. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்கும்.. மன அழுத்த நோய் வராமலும் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, நீரிழிவு நோய், முடக்குவாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications