சொத்தை பற்கள் வர்றதுக்கு காரணமே இதுதான்.. செவ்வாழை போதுமே.. வலுவான பல்லுக்கு உதவும் பெஸ்ட் உணவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பற்கள் சொத்தையாவதற்கு என்ன காரணம்? இதனை ஆரம்பத்திலேயே தடுக்க முடியுமா? எளிய முறையில் பல் சொத்தைக்கான தீர்வுகள் என்னென்ன?

பற்களின் தேய்மானம்தான் அனைத்து தொந்தரவுகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.. பல் சொத்தையாகிவிட்டால், அது கடும் வலியை ஏற்படுத்திவிடும்.. பற்களின் தேய்மானங்கள் காரணமாக பல் வலிகள் வரலாம்.. பல்லை நறநறவென கடித்தாலும் பல் வலி வரலாம்..

Health Health news Health tips Red Banana sevvazhai Sevvazhai sevaazhai

வெற்றிலை: வாய் சுகாதாரம் இல்லாவிட்டால் பல் சொத்தை வர வாய்ப்புள்ளது.. பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கிவிடும்.. காபி, டீயை அதிகமாகக் குடிப்பது, சிகரெட் பிடிப்பது, வெற்றிலை பாக்கு, புகையிலை காரணமாக பற்களில் படியும் காரைகளில், பாக்டீரியாக்கள் எளிதாக புகுந்துவிடும். இதனாலும், பற்களில் சொத்தை விழுந்துவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் பல் சொத்தை வரலாம்.

பற்களில் சொத்தை வந்துவிட்டாலே வலியும், கூச்சமும் ஏற்படும்.. சரியான "திசையில்" பல் தேய்க்காமல் போனாலும், பல் வலி வரலாம்.. பற்களின் எனாமல்கள் வலுவாக இருந்தாலே, பற்களின் ஆரோக்கியமும் நீடிக்கும்... பல் சொத்தைகள், கூச்சத்தையும் அதிகமாகவே தந்துவிடும்.

எனாமல்: எனவே, பற்களில் சொத்தை ஏற்பட்டால், எனாமலில் இருக்கும்போதே மருத்துவர்களிடம் சென்று முறையான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டுமாம்.. Resins, Pit and fissure sealants போன்ற சிகிச்சைகைள் மூலம் பல் சொத்தைகளை எளிதாகவே அடைத்துவிடுவார்கள்.

அதாவது, டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் 'ஃபில்லிங்' எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது.. ஆனால், பல் சொத்தைகள் சற்று ஆழமாக போய்விட்டால், முதலில் தற்காலிகமாகவும், பிறகு நிரந்தரமாகவும் பற்களை அடைத்துவிடுவார்கள்.. இதில், ரூட் கேனல் எனப்படும் வேர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

பற்கள் சிகிச்சை: இந்தமுறை சிகிச்சையில், தொற்றுக்கு ஆளான திசுக்களை முழுமையாக நீக்கிவிட்டு, அந்த இடத்தை அடைத்து விடுவார்கள்.. இதனால், பற்களை இழக்கவும் தேவையில்லை.. எனவேதான், பல் சொத்தைகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்கிறார்கள்.

எனினும், பற்களை ஆரோக்கியத்துடன் வைத்து கொண்டாலே சொத்தை பற்கள் வராமல் தடுக்கலாம்.. இதற்கு, ஒருநாளை 2 முறை பல் துலக்க வேண்டும்... அதுவும் சரியான திசையில் துலக்க வேண்டும். மேல் தாடைப்பற்களை கீழ்நோக்கி சுழற்றியும், கீழ்த்தாடைப் பற்களை மேல் நோக்கி சுழற்றியும் துலக்க வேண்டும்... கடிக்கும் பகுதியை முன் பின்னாக துலக்க வேண்டுமாம்.. அப்படியே நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.

ஆலங்குச்சி: கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. காரணம், சுண்ணாம்பு, செங்கல், ஆலங்குச்சி, வேலங்குச்சி, கரி மற்றும் சிலவகையான பற்பொடிகூட பற்களின் எனாமல் போக காரணமாக இருக்கலாம். எனவே, ஃபுளூரைடு கலந்த பற்பசைகளை, சிறிதளவு மட்டுமே பயன்படுத்தலாம்.. தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் பற்கள் சுத்தமாகும்.

வைட்டமின் C, D, கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.. அதாவது, மீன் எண்ணெய், தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சைக்காய்கறிகள், கீரைகள், போன்றவற்றில் இந்த சத்துக்கள் அத்தனையும் உள்ளன..

புரோட்டீன் அதிகமாக உள்ள பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்து கொள்வதால், பல் ஈறுகள் உறுதியாகும்.. இதில் பால் மிகவும் முக்கியமானது.. கால்சியம் அதிகமுள்ள பால் பற்களுக்கு அத்தனையும் பாதுகாப்பை தரக்கூடியது..

வெள்ளரிக்காய்: காய்கறிகளில், காரட், வெள்ளரிக்காய், தானியங்களில் கேழ்வரகு, சலிக்காத கோதுமை மாவு, சம்பா கோதுமை ரவை, இறைச்சியில் கோழியின் ஈரல், ஆட்டு ஈரல், முளை, மற்றும் தேங்காய், செலினியம் உப்பு உணவில் சேர்க்க வேண்டும்.

பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, கொய்யா மிகவும் நல்லது.. தினமும் 5-8 உலர் திராட்சையை மென்று சாப்பிடுவதால், பல்வலி, ஈறுவலி வராமல் தடுக்கலாம்.

அதேபோல, செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது என்கிறார்கள்... கொய்யா இலைகளை பறித்து, நீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வரலாம்.. அதேபோல, பேக்கிங் சோடா, விர்ஜின் தேங்காய் எண்ணெய் இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட் போல் செய்து தினமும் பல் துலக்கிவந்தாலே, பல் சொத்தைகள் வராமல் தடுக்கலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+