முருங்கை இலை மேஜிக்.. ஒரு கைப்பிடி முருங்கையிலை போதும்.. தொங்கும் சதையை வேகமாக கறைத்திடும் டிப்ஸ்
சென்னை: பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைவது முருங்கைக்கீரையாகும். அந்தவகையில், உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள், முருங்கைக்கீரையை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?
முருங்கைக் கீரையில் பசலைக்கீரையை விட 25 முறை அதிகமாக இரும்புச்சத்தும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக வைட்டமின் C சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிகமாக பொட்டாசியமும், முட்டையை விட 4 மடங்கு அதிகமாக புரோட்டீனும், கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக வைட்டமின் A சத்தும், பாலை விட 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் உள்ளது.

அதனால்தான், கற்பக விருட்சம் என்று முருங்கையை சொல்கிறார்கள்... உடல் எடை குறைப்பதில், முருங்கைக்கீரை சிறந்தது எனலாம்.. முருங்கைக்கீரையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும்.
சூப்: அல்லது, முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி, ஒரு கல் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வந்ததும், வடிகட்டி, இதை மட்டுமே காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
அல்லது முருங்கையிலை சாறு குடிக்கலாம்.. கீரையை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி, எலுமிச்சம் சாறு, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். ஆனால், இந்த சாற்றினை தொடர்ந்து 7 நாட்கள் குடித்தபிறகு, இடைவெளி விட்டு குடிக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை அன்றாடம் சாப்பிட்டு வருபவராக இருந்தால், டாக்டரின் அனுமதி இல்லாமல் இந்த சாறு குடிக்க கூடாது.
முருங்கை பொடி: அல்லது, முருங்கையின் கொழுந்து இலைகளை பறித்து சுத்தம் செய்து, நன்றாக அலசி கொள்ள வேண்டும். இதில், தண்ணீர், மற்றும் சிறிய இஞ்சி துண்டு, சேர்த்து அரைத்து வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம். தினமும் காலை உணவுக்கு அரை மணிநேரத்திற்கு முன்போ அல்லது பின்போ இதை குடிக்கலாம். இந்த பானத்தையும், வாரம் ஒரு முறை, விடுமுறை விட்டு குடிக்கலாம்.
அல்லது முருங்கையிலையை ஒரு கைப்பிடி எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, பூண்டு, சீரகம், தக்காளி, மஞ்சள் தூள், முருங்கைக்கீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
சூப் ரெடி: பிறகு, சாறு மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துவிட்டு, மற்ற பொருட்களை மிக்ஸியில் அரைக்க வேண்டும். இப்போது எடுத்து வைத்திருக்கும் சாற்றினை, அதிலேயே கொட்டி, உப்புத்தூள், மிளகுதூள் சேர்த்தால், கீரை சூப் ரெடி.
முருங்கை இலை பொடிகள் தனியாகவே கடைகளில் விற்கின்றன.. இந்த பொடியில் குளோரோஜெனிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குளோரோஜெனிக் போன்ற அமிலங்கள் உள்ளன.. இந்த முருங்கை பவுடரை டாக்டரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்தலாம். அதேபோல, உடல் எடை குறைய முருங்கைக்காயையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்..












Click it and Unblock the Notifications