பற்கள் ஆடுகிறதா? ஜஸ்ட் இந்த 2 பொருள் போதும்.. பல்லெல்லாம் பலம் பெறும்.. அற்புத நெல்லிக்காய் + பூண்டு
சென்னை: நம்முடைய வாய் சுகாதாரத்தை பேண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.. அந்தவகையில், பற்கள் சம்பந்தமான ஆரோக்கியத்திலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.. குறிப்பாக பற்கள் ஆடினால் அதற்கு என்ன தீர்வு?
பற்களை சுற்றியிருக்கும், எலும்புகள், பலமின்றி இருப்பதுதான் நம்முடைய பற்கள் ஆடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.. இதன்காரணமாக, பற்களில் ஏற்படும் ஈறு நோய் நாளடைவில் அதனை சுற்றியுள்ள எலும்பிலும் பரவிவிடுவதால், எலும்பு தேய ஆரம்பிக்கிறது. பற்களின் பிடிமானமும் குறைந்து, நாளடைவில் ஆட துவங்குகின்றன.

பற்கள் ஆடுவதால், உடனே அந்த பற்களை எடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.. பல் ஆடுவதற்கான சரியான காரணம் தெரிந்தாலே, இதற்கு நிவர்த்தி கண்டுபிடித்துவிடலாம்..
நாம் பற்களை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. சாப்பிட்ட பிறகு, பற்களில் இருக்கும் எச்சங்களை வெளியேற்ற மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும்.. மருத்துவரின் ஆலோசனையை பெற்று, வைட்டமின் D, கால்சியம் சப்ளிமெண்ட்களை எடுத்து கொள்ளலாம்.
பற்கள் பலமாக இருக்க வேண்டுமானால், உணவுமுறைகளில் கவனத்தை செலுத்த வேண்டும்.. நிறைய பூண்டு, மிளகு, மற்றும் மஞ்சளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காரணம், ஆடும் பற்களுக்கு சிறந்த மருந்துகள் இவை.. ஆண்டிமைக்ரோபியல் பண்பு கொண்டவை என்பதால், பூண்டு, மிளகு, மஞ்சள் இந்த மூன்றையும் தவிர்க்கவே கூடாது.
அதிலும், ஒரு பல் பூண்டினை, தட்டி வலி பற்கள் ஆடும் இடத்தில் வைத்தால், நுண்ணுயிரிகள் நீங்குவதுடன், பற்களும் பலப்படும். மிளகு, மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட், பலவீனமான பற்களை தடுத்து நிறுத்தும்.. வலியையும் கட்டுப்படுத்தும்.
அல்லது, மஞ்சள் தூள், மிளகுதூள் இரண்டையும் சேர்த்து ஈறுகளில் வைத்து மென்மையாக மசாஜ் செய்யலாம்.. இதனால் பற்களும், ஈறுகளும் வலுவடையும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவைகளை வைத்து, ஆயில் புல்லிங் செய்யலாம்.. அல்லது நெல்லிக்காய் இடித்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம். அல்லது நெல்லிக்காயை தினமும் மென்று சாப்பிட்டு வந்தாலே பற்கள் உறுதிப்பெறும்.இந்த பிரச்சனைக்கு, நெல்லிக்காய் பொடி கால் கப் எடுத்துக் கொண்டு, இதனுடன் மஞ்சள்- 1 ஸ்பூன், பட்டைப் பொடி - கால் ஸ்பூன், கிராம்புப் பொடி - அரை ஸ்பூன், உப்பு - 1 ஸ்பூன் போன்றவற்றையும் சேர்க்க வேண்டும். பிறகு, ஒரு வாணலில் நல்லெண்ணெய் கால் கப் சேர்த்து, இந்த பொடிகளையும் அதில் கொட்டி கலந்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யில் தினமும் ஆயில் புல்லிங் செய்யலாம்..
பற்கள் ஆடுகிறதா: அதேபோல, இந்த எண்ணெய்யை எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்திருந்துவிட்டு, பிறகு உமிழ வேண்டும். இதனால், ஈறுகள் பலப்படும். பற்களும் கெட்டிப்படும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications