குண்டா இருக்கீங்களா.. இந்த கற்பூரவள்ளி போதுமே.. அதென்ன "கொய்யா தண்ணீர்"?.. சூப்பர் பழங்களை பாருங்க
சென்னை: உடல் எடையை குறைப்பதில் பழங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இதில் குறிப்பிட்ட 3 வகையான பழங்களை பற்றி பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தர்பூசணி பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி போன்ற பழங்களை தவிர்க்கவே கூடாது. அதேசமயம், வாழைப்பழத்தையும் தவிர்க்க கூடாது.

வாழைப்பழம்: பொதுவாக, வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள்.. ஆனால், அது தவறு என்கிறார்கள் நிபுணர்கள்.. ஒரே ஒரு வாழைப்பழத்தில், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்கு தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது
ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே, வயிறு நிறைவாகிவிடும். நீண்ட நேரம் பசி எடுக்காது.. பச்சை வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால், கொழுப்பு எரியும் தன்மை அதில் நிறையவே உள்ளது. வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தாலே, அன்றைய நாள் முழுவதும் வயிறு நிறைந்திருக்கும். வாழைப்பழத்தில், பொட்டாசியம் அதிகமாக உள்ளதுடன், நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம்..
சத்துக்கள்: பொட்டாசியம், வைட்டமின் A. B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், இப்படி பல சத்துக்கள் உள்ளன.. வாழைப்பழத்தை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து சாப்பிடும்போது, உடல் எடை அதிகரிக்காது என்கிறார்கள். இதில், உடல் எடையை குறைக்க உதவுவது கற்பூரவள்ளி வாழைப்பழத்தை சொல்லலாம்..
இந்த பழத்தில் செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது... கால்சியம் அதாவது, மேங்கனீஷ், மெக்னிஷியம் மிகுதியாக உள்ளதால், எலும்புகளுக்கு நன்மை பயக்கிறது.. நேரமின்மை, டயட் போன்ற காரணங்களுக்காக காலை நேரத்தில் பலரும் சாப்பிடுவதில்லை.. இவர்கள் ஒரு கற்பூரவள்ளியை, காலையில் சாப்பிடும்போது, நாள் முழுவதும் ஆற்றலை தருகிறது.. களைப்பை அண்டவிடாது.. முக்கியமாக மன அழுத்தத்தையும் அண்டவிடாது..
நிறைவுற்ற கொழுப்புகள்: திராட்சை பழமும் உடல் எடையை குறைக்கிறது.. நல்ல நிறைவுற்ற கொழுப்புகள் இதில் உள்ளதால், சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.. எலுமிச்சம்பழத்திலுள்ள வைட்டமின் C, உடல் எடை குறைப்பதில் பெரும்பாங்காற்றுகிறது.. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைக்க எலுமிச்சை எல்லா வகையிலும் உதவுகிறது.
மிக மிக குறைந்த கலோரி கொண்ட பழம் கொய்யாக்காய்.. புரோட்டீன்கள், வைட்டமின் B6, C, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் இப்படி சத்துக்கள் உள்ளன.. நிறைய நிறைய நார்ச்சத்து கொண்டதால், உடலிலுள்ள கழிவுகளை அகற்றுகிறது இந்த பழம்.
செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும் என்பதால், கொய்யாக்காயை தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.. உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கொய்யா மட்டுமல்லாமல், கொய்யா இலையும் உதவுகிறது.
கொய்யா தண்ணீர்: கொய்யாவின் கொழுந்து இலையை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். உடல் எடை குறைய வேண்டுமானால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.. அப்படி சாதாரண தண்ணீருக்கு பதில், இந்த இலையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், கூடுதல் நன்மையாகும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications