எலும்பு மஜ்ஜை.. தோலில் சுருக்கமா? வரி சரி சுருக்கத்தை ஓட்டும் டிப்ஸ், முதிர்ச்சியை மாற்றும் அதிசயம்
சென்னை: முதுமையை யாராலும் தடுக்க முடியாது.. அதேசமயம், நம்முடைய உடலில் ஏற்படும் சுருக்கங்களை, முறையான உணவுப்பழக்கத்தின் மூலம் ஓரளவு தள்ளிப்போட முடியும்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உடல் சுருக்கத்தை சரி செய்ய உதவக்கூடிய அற்புதமான வரப்பிரசாதம்தான் கொலாஜன்.. ஒரு வகையான புரதத்தின் பெயர்தான் கொலாஜன்.. இந்த கொலாஜனின் பயன்கள் ஏராளமானவை..

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது, சருமம் ஈரப்பதத்துடன் வைக்க இந்த கொலாஜன் உதவுகிறது.. சருமத்தை பாதுகாக்கக்கூடியது.. சருமத்துக்கு பொலிவு தரக்கூடியது.. சருமத்தில் சுருக்கங்களை தராமல் காக்கக்கூடியது இந்த கொலாஜன்.
எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதைகளில் இந்த கொலாஜன் உற்பத்தியாகும்.. நாம் முறையான உணவை மேற்கொள்ளும்போது, இந்த கொலாஜன் உற்பத்தியும் நமக்கு அதிகரிக்கும்.
சுருக்கங்கள்: இந்த கொலாஜன் உற்பத்தி உடலில் குறையும்போது, சுருக்கங்கள் உள்ளிட்ட தொந்தரவுகள் வந்துவிடும். எனவே, கொலாஜன் உற்பத்தியை குறையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கெனவே மருந்து, மாத்திரைகள், லோஷன்கள் கிடைக்கின்றன.. அதனால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே இதனை பயன்படுத்த வேண்டும்.
ஆனால், உணவு முறையில் இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும் என்றாலும், சில வகை உணவுகள் இந்த கொலாஜன் உற்பத்தியையே குறைத்துவிடுமாம்.. குறிப்பாக, அரிசி, மைதா, கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்புகள், வெள்ளை சர்க்கரை இவைகளை சாப்பிடும்போது கொலாஜன் உற்பத்தி அளவு குறைந்துவிடுமாம்..
அதனால், பச்சை காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு, ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா, சோயா போன்றவற்றில் கொலாஜன் நிறையவே அடங்கியிருக்கின்றன. முட்டையின் வெள்ளைக்கரு, மீன்வகைகள், மார்கண்டம் என்று சொல்லக்கூடிய ஆட்டின் விலா எலும்பு, ஆட்டுக்கால் சூப்பிலும் நிறைய கொலாஜன் இருக்கின்றன..
கொட்டைகள்: ஆளி விதைகள், வால்நட்ஸ் மற்றும் பாதாம் போன்ற கொட்டை வகைகளையும் சாப்பிட்டு வரவேண்டும். பட்டர்ஃப்ரூட் என்று சொல்லக்கூடிய வெண்ணெய்ப்பழங்களில் கொலாஜன் நிறைய உள்ளன..
பூசணி விதைகளிலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளன.. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் உள்ளன.. வைட்டமின் E, துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடியவை என்பதால், பூசணி விதைகளையும் சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.
தோல் சுருக்கங்கள்: தோல் சுருக்கத்தை தள்ளிப்போடும் சக்தி கேரட் கிழங்குகளுக்கு உண்டு. கொலாஜனை ஒருங்கிணைக்க தேவையான அமினோ அமிலங்கள் பீன்ஸ்களில் உள்ளன.. உடலுக்கு தேவையான தாமிரத்தையும் பீன்ஸ்கள் தருகின்றன. சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகளையும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முதுமையை தாமதப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications