சர்னு வெயிட் குறைய வவ்வால் மீன்.. வாவல் மீனை மிஸ் பண்ணாதீங்க.. இதயம் காக்கும் சூப்பர் வவ்வால் மீன்
சென்னை: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மீன்வகைகளில் ஒன்றுதான் வவ்வால் மீன்.. இதிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக, மீன்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வதற்கு காரணமே இதிலுள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச் சத்தும்தான்.. கடல் மீன்களில் ஒமேகா-3 அதிகமாக இருக்கும்நிலையல், ஆற்று மீன்களில் இந்த கொழுப்பு அமிலம் அவ்வளவாக காணப்படுவதில்லை...

மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.. இந்த ஒமேகா-3 அமிலம்தான், உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் அதிக உளவு உதவுகிறது..
நம்முடைய உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது.. இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இந்த கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
வவ்வால் மீன்கள்: அந்தவகையில், வவ்வால் மீன்களில் நிறைய பலன்கள் உண்டு.. வாவல் மீன் என்றும் சொல்வார்கள்.. கடல் வவ்வால், ஏரி வவ்வால் வகைகளும் உண்டு. குறைந்த அளவு எண்ணெய் உள்ள இந்த மீனில், ஒமேகா 2 ஆசிட், வைட்டமின் A, வைட்டமின் B1 மற்றும் வைட்டமின் D போன்றவை இதில் உள்ளன.. கொழுப்பு அமிலங்கள் மற்றும் B12 வைட்டமின்களும் உள்ளன...
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிக மிக சிறந்தது இந்த மீன்.. ஆனால், மிதமான அளவில் இந்த மீன்களை எடுத்து கொள்ள வேண்டுமாம்.
மன அழுத்தம்: இந்த மீனை சாப்பிட்டு வரும்போது, இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் குறைகிறது. ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமன்றி நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பக்கவாதத்தின் தீவிரத்தை 50 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அத்துடன் மூளை ஆரோக்கியத்தையும், மூளை செயல்பாட்டையும் இந்த மீன் ஊக்குவிக்கிறதாம். உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த மீனை தாராளமாக எடுத்து கொள்ளலாம். காரணம், கொழுப்புகள் குறைவாக இருப்பதால் இது எடை இழப்பு போன்றவற்றிற்கு சிறந்த உணவாக இருக்கிறது.
சரும பாதுகாப்பு: வைட்டமின் D அதிகமுள்ள இந்த மீன்கள் சருமத்துக்கும் பாதுகாப்பை தருகின்றன.. இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைத்து, வயதாவது தள்ளிப்போடப்படுகிறது. அதிக மனக்கவலை, மனச்சோர்வு போன்ற மன நோய்களிலிருந்து சமாளிக்க இந்த மீன்கள் உதவுகின்றன.
குழந்தைகள் இந்த மீனை சாப்பிடுவதால் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது... பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுக்கும் திறன் கொண்டது இந்த வவ்வால் மீன்.. இதனால், மார்பக புற்றுநோய் வரும் அபாயமும் தடுக்கப்படுகிறது..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications