காலியாகுது கிட்னி.. சிறுநீரக நலனுக்கு முள்ளங்கிய இலை ஒன்றே போதும்.. அட்டகாச முள்ளங்கி கீரை ஜூஸ்.. அட
சென்னை: சிறுநீரகங்களில் ஏற்படும் அத்தனை தொந்தரவுகளுக்கும் ஒரே தீர்வாகவும், மருந்தாகவும் நமக்கு கிடைத்திருப்பது முள்ளங்கி கீரை எனலாம்.. இந்த ஒரு கீரையே போதும்.. ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துவிடும்.
முள்ளங்கி கிழங்கை பொறுத்தவரை முள்ளங்கியில் இருப்பதைவிட 6 மடங்கு, வைட்டமின் C, முள்ளங்கி கீரையில் ஒளிந்திருக்கின்றன.. உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன், நோய்களை நெருங்க விடாமல் இந்த இலைகள் தடுக்கின்றன. இதனால், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் இதயம், கண்கள் என அனைத்து உறுப்புகளுமே திறன்பட செயலாற்ற தூண்டுகோலாகிறது.

முள்ளங்கி சாறு: இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது முள்ளங்கி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை தரும் என்கிறார்கள். சரும அலர்ஜியை போக்க வேண்டுமானால், முள்ளங்கி கீரையே போதுமானது.
இந்த கீரைகள், சுவாசப்பாதையில் உள்ள தொற்றுகளை அகற்றுவதால் சிறுநீரகம் காக்கப்படுகிறது.. காமாலையை ஒழிப்பதால், கல்லீரல் காக்கப்படுகிறது.. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை இந்த முள்ளங்கி இலைகள் தீர்க்கின்றன..
முள்ளங்கி இலைகள்: குளிர்ச்சி நிறைந்த இந்த முள்ளங்கி இலைகள் மூலநோய்களுக்கு அருமருந்தாகின்றன.. முள்ளங்கி இலைகள் வீக்கத்தைக் குறைக்கின்றன.
முள்ளங்கி கீரையின் சாற்றில், வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகுமாம். கீரையின் சாற்றினை 6 ஸ்பூன் குடித்து வந்தாலே, சிறுநீரகத்திலுள்ள கற்கள் வெளியேறிவிடும்.. உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைப்பதால், எடை குறைபவர்களுக்கு இந்த கீரையை சாப்பிட வேண்டும்.

சிறுநீரக கற்கள்: சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், மற்ற கீரைகளை சாப்பிட முடியாவிட்டாலும், இந்த முள்ளங்கிக் கீரையையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும். சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டாலே நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சிறுநீர் கல்லடைப்புகளுக்கும் இந்த கீரை நல்லது... ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து 3 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வந்தாலே நீர் அடைப்பு தொல்லை நீங்கிவிடுமாம்.

வெங்காயம்: இந்த கீரையில் சப்பாத்தி செய்யலாம்.. சப்பாத்தி மாவில் முள்ளங்கிக்கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி என அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிப்போட்டு, எலுமிச்சை சாறும், சிறிது எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து சப்பாத்தி சுடலாம். அதேபோல, இந்த கீரையில் சூப் செய்து குடித்தால், உடல் எடை குறைவதற்கு உதவி புரியும்.. இந்த கீரையில் துவையல் அரைத்து சாப்பிடலாம்.
எப்போதுமே, காய்களை வாங்கி கொண்டு, அதன் இலைகளை கீழே தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், பீட்ரூட், பூசணி, முள்ளங்கி இந்த காய்களுடன் சேர்ந்தே இருக்கும் கீரைகளில்தான் நிறைய சத்துக்கள் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. அதாவது, முள்ளங்கியில் இருப்பதைவிட 6 மடங்கு, வைட்டமின் C, இந்த முள்ளங்கி கீரையில் இருக்கிறதென்றால், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் இதன் மகிமையை..!!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications