ஒல்லி ஒல்லி உடம்பு வேணுமா.. உளுத்தம்பருப்பு இருக்குதுல்ல.. சூப்பரா எடையை குறைக்கும் 4 வகை பருப்புகள்
சென்னை: உடல் எடையை குறைப்பதில், பருப்பு வகைகளுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அந்தவகையில் ஒரு சில பருப்புகள் தரும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
பெரும்பாலும், உடல் எடையை குறைக்க வேண்டுமானால், நார்ச்சத்து, நீர்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.. இந்த சத்துக்கள் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மட்டுமல்லாமல் விதைகளிலும் உள்ளன.
குறிப்பாக, பூசணி, சியா, ஆளி விதைகளில் இந்த சத்துக்கள் நிறைந்துள்ளன.. இவைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்வதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன..

வெந்தயக்களி: வெந்தய விதைகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம். குளிர்ச்சி நிறைந்த இந்த விதைகளில், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், துத்தநாகம், ஃபோலேட் வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துக்கள் என கணக்கிலடங்காத நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. கொலஸ்ட்ராலை குறைக்க, வெந்தயத்தை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த விதைகளில் எள் சேர்த்து கொள்ளலாம்.. "இளைத்தவனுக்கு எள்ளை கொடு" என்று சொன்னாலும், உடல் எடையை குறைப்பதில் எள் பேருதவி புரிகிறதாம். உடலில் நல்ல கொழுப்பை உண்டாக்கும் திறன் இந்த எள்ளுக்கு உண்டு.
கொண்டைக்கடலை: அதுபோலவே, பருப்புகளில் கொண்டைக்கடலையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நார்ச்சத்து நிறைந்த இந்த கொண்டைக்கடலை ஊறவைத்து சாப்பிடுவார்கள். அதேசமயம், கொண்டைக்கடலையில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், எலும்புகள் வலுவாகின்றன.. இதனால், கூடுதலாக எடை இழப்பையும் ஊக்குவிக்கின்றன.
பச்சை பயிறு முளை கட்டி சாப்பிடுவதால், எடை வெகுவாக குறையும்.. நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த பயிறில் புரதம் அதிகமாக உள்ளது.. அதேசமயம் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பயிறு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
உளுத்தம்பருப்பு: உடல்எடை மெலிந்தவர்களுக்கு, உளுந்தங்களி சமைத்து தருவார்கள்.. இதனால், உடலில் பலம் கூடுவதுடன், எடையும் கூடும்.. அதேசமயம், உடல் எடை மெலிய வேண்டுமானாலும், இந்த உளுந்தம்பருப்பு உதவுகிறது என்பது ஆச்சரியமான தகவல்..
வைட்டமின் A, C, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், சத்துக்கள் இந்த பருப்பில் உள்ளன. கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டுவகையான நார்ச்சத்துக்களும் உள்ளன.. இந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைபுரிகின்றன. அத்துடன், நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காமல் வைத்திருக்கின்றன..
இந்த பருப்பில் பொட்டாசியமும் அதிகமாக உள்ளது. 200 கிராம் உளுத்தம்பருப்பில் 1500 மிகி பொட்டாசியம் இருக்கிறதாம். இந்த பருப்பிலுள்ள "உயர் புரத உள்ளடக்கம்" எடை குறைப்புக்கு உதவுகிறது.. ஆனால், மிதமான அளவுதான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் நிச்சயம் எடை கூடிவிடும்.
நார்ச்சத்துக்கள்: புரதம், நார்ச்சத்து நிறைந்த இன்னொரு முக்கிய பருப்பு துவரம் பருப்பாகும். உடலிலுள்ள கொழுப்பு வெளியேற்ற இந்த பருப்பு உதவுவதுடன், இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய் வரும் அபாயத்தையும் துவரம் பருப்பு குறைக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications