சர்னு வெயிட் குறையணுமா.. ஜஸ்ட் நீங்க இந்த 3 விதைகளை ட்ரை பண்ணுங்க.. தொப்பை ஈஸியா கரையுதாமே.. செம
சென்னை: உடல் எடையை குறைப்பதில், விதைகளின் பங்கு அபாரமானவை.. அந்த வகையில், ஒருசில விதைகளின் பயன்களை பார்க்கலாம்...!!
வெள்ளரிக்காயை எடுத்துக் கொண்டால், விதையுடன் சாப்பிட வேண்டும்.. மெக்னீசியம், நார்ச்சத்து. பொட்டாசியம் போன்றவை இதில் நிறைந்துள்ளன.. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதமும், மிச்சமுள்ள 4 சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து,தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் B, C போன்றவைகளும் கலந்துள்ளன.

உடல் எடை : உடல் எடை குறைக்க வேண்டுமானால், வெள்ளரியை தைரியமாக சாப்பிடலாம்.. கலோரிகள் மிக மிக குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.. வெள்ளரி பிஞ்சுவிலும் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. இதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பி நீண்ட நேரம் பசி எடுக்காது... அத்துடன் தொப்பையை குறைக்கவும் இந்த காய் உதவுகிறது.
இந்த காயில், ஸ்டேரோல் என்ற பொருள் இருப்பதால், நம்முடைய உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைய செய்கிறது.. வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
விதைகள்: அடுத்ததாக, எள் விதைகளிலும் நிறைய பலன்கள் கிடைக்கின்றன.. கருப்பு எள்ளை எடுத்து கொண்டால், கால்சியம், வைட்டமின் B, E, இரும்புச் சத்து, செஸமின், செஸமோலின், பைட்டோஸ்டீரால் போன்ற வேதிப்பொருள்களும், லினோலியிக், ஒலியிக் போன்ற அமிலங்களும் நிறைந்துள்ளன..
மேலும் நிறைய நார்ச்சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளதுடன், 15 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பு, 41 சதவீதம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 39 சதவீதம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளன. தினமும் 40 கிராம் எள்ளை 2 மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தாலே, கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்..
சர்க்கரை நோயாளி: இதில் வெந்தயத்தையும் சேர்த்து கொள்ளலாம்.. வெந்தயத்தை பொறுத்தவரை, நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து என பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.. உடல்சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது வெந்தயம். சிறுநீரை பெருக்கக்கூடியது..
இந்த விதையிலுள்ள ஆல்கலாய்டுகள், ஜீரணத்தை தந்து, பசியை அதிகப்படுத்தக்கூடியவை.. நரம்புகளை பலப்படுத்தக்கூடியவை.. ஆனால், முளைக்கட்டி பயன்படுத்துவதால், வெந்தய விதைகளில் நார்ச்சத்துக்களை முழுமையாக பெற முடியும். வைட்டமின் C, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், டயோஸ்ஜென் போன்ற சத்துக்கள் இந்த விதைகளில் உள்ளன..
வெந்தய விதைகள்: 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் வெந்தய விதையில் உள்ளதால், உடல் எடையை குறைக்க, இந்த விதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. வெந்தய விதைகளை தேனில் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் மாற்றம் தெரியுமாம். வெந்தயத்திலுள்ள காலக்டோமன் என்ற பொருள், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து, தேவையில்லாத கொழுப்புகள், சர்க்கரையை கரைக்க உதவுகிறது.. இதனால் விரைவில் உடல் எடை குறையுமாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications