சேப்பங்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க.. சர்க்கரை நோயாளி சேனைக்கிழங்கு சாப்பிடலாமா? ஆயுள்தரும் சேனை இலை
சென்னை: புற்றுநோய் நம்மை தாக்காமல் இருப்பதற்கான அத்தனை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கிறது இந்த சேப்பங்கிழங்கு.. சேனை, சோம்பு, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு என்று இன்னும் பலவித பெயர்களில் அழைக்கப்படும் இந்த சேப்பங்கிழங்கு நம் ஆயுளை நீட்டிக்கும் அருமருந்தாகும்.
ஒரு கப் சேப்பங்கிழங்கில் 187 கலோரிகள் இருக்கிறதென்றால், இந்த கிழங்கின் சத்துக்களை பாருங்கள்.. பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்துள்ள சேப்பங்கிழங்கு கண்களுக்கான கோளாறுகளை நீக்குகிறது..

வைட்டமின் A, E நிறைந்த சேப்பங்கிழங்கு, சரும சுருக்கத்தை விரட்டுகிறது.. பாஸ்பரஸ், கால்சியம் இந்த இரண்டு சத்துக்களுமே சேப்பங்கிழங்கில் அதிகம் உள்ளன. இதனால் எலும்புகள், பற்கள் பலப்படுகின்றன.. நார்ச்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு, அஜீரணத்தை போக்கி குடல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஆண்மை குறைபாடு: வைட்டபின் B உள்ளதால் நரம்புதளர்ச்சியை நீக்கும் பண்பு இந்த சேப்பங்கிழக்குக்கு உண்டு. எனவே, ஆண்மை குறைபாடுள்ளவர்கள், இந்த கிழங்கை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும்.
குறிப்பாக சேப்பங்கிழங்கின் கீரைகள் கண்களுக்கு அருமருந்தாகின்றன.. இந்த கீரைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால், கண் பாதிப்புகள் நெருங்குவதே கிடையாது.. வயதாகுவதால் ஏற்படும் கண் புரைகளும் சரியாயிடும்.
இலைகள்: சேப்பங்கிழங்கு இலை சாறுகள், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. சேப்பங்கிழங்கு இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனால், நீரிழிவு நோயாளிகளுக்கும் மருந்தாகிறது. எனவே, சேப்பங்கிழங்கு இலை சாற்றினை குடித்து வந்தால், ரத்த சர்க்கரை அளவு சீராகும். நார்ச்சத்து நிறைந்த இந்த கீரையின் சாறு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மலச்சிக்கலும் தீர்க்கிறது. பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷத்தன்மையை முறிக்கும் தன்மை இந்த இலைக்கு உண்டு..
இத்தனை நன்மைகள் இருந்தாலும், சேப்பங்கிழங்கின் தலையாய உதவி, புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் தன்மை உடையது.. முக்கியமாக, பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராகவும் பாதுகாக்கிறது. இந்த கிழங்கும்சரி, அதன் இலைகளும் சரி, புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.. அதிலும் குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றல் இந்த இலைகளுக்கு உண்டு..
புற்றுநோய்: புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வுகளின்படி, சேப்பங்கிழங்கில் காணப்படும் கிரிப்டோக்சாந்தின் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வாய்ப்பை குறைப்பதில் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறதாம்.
சேப்பங்கிழங்கிலுள்ள பொட்டாசியம், நம்முடைய உடலிலுள்ள சவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் இடையில் ஆரோக்கியமான திரவ மாற்றத்தை ஊக்குவிக்குகிறது.. அத்துடன், ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் அழுத்தம் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது..
சரும பாதுகாப்பு: இந்த கிழங்கிலிருக்கும் ஸ்டார்ச் சத்து, சருமத்துக்கு பொலிவையும் நிறத்தையும் தருகிறது.. முக்கியமாக, அதிகப்படியான வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளை போக்குவதில் மிகுந்த பலன்தருகிறது.. வைட்டமின் A, E சத்துக்கள், சருமத்தில் உண்டாகும் காயம், கொப்பளம் போன்றவைகளை ஆற்றுவதற்கு உதவுகிறது.












Click it and Unblock the Notifications