வெறும் முள்ளங்கி போதும்.. சிவப்பு Vs வெள்ளை முள்ளங்கியில் எது பெஸ்ட்? வாவ் அட்டகாச முள்ளங்கி கிழங்கு
சென்னை: சிவப்பு, வெள்ளை என 2 வகையான முள்ளங்கிகள் உள்ள நிலையில், இதில் எந்த முள்ளங்கி சிறந்தது தெரியுமா? இந்த முள்ளங்கியை சாப்பிட்டால், பக்கவிளைவுகள் வர வாய்ப்புள்ளதா?
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது முள்ளங்கி.. இதை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படுவதுடன், சிறுநீரகமும் வலுப்படும்.. நீர்ச்சத்து நிறைந்த இந்த கிழங்கை சாப்பிட்டுவது சிறுநீரைப் பெருக்கும். மலச்சிக்கலை போக்கி, குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. பசியை உண்டாக்கும்..

முள்ளங்கி கிழங்கு: இந்த கிழங்கில் உள்ள வைட்டமின் C சத்துக்கள், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. ரத்த நாளங்களின் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. இந்த வைட்டமின் C சருமத்தை காக்கிறது.. காய்ச்சல், ஜலதோஷத்தை போக்குகிறது.
அதேபோல, முள்ளங்கி கீரையிலும் நார்ச்சத்துக்கள் அதிகம்.. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A,B,C போன்றவை உள்ளன.. முள்ளங்கியில் இருப்பதைவிட 6 மடங்கு, வைட்டமின் C, இந்த முள்ளங்கி கீரையில் இருக்கிறதாம். இந்த முள்ளங்கி இலையை எடுத்துக் கொண்டால், உள்ளுறுப்புகளுக்கு பலம் சேர்க்கிறது.. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு வேளையாவது, இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோய்: சுவாசப்பாதையையும் இந்த இலை சரிசெய்யக்கூடியது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், முள்ளங்கி இலையை அதிகம் சேர்த்துக் கொண்டால் கால்சியம் பிரச்சனை தீரும். இந்த கீரையில் சாறு எடுத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகும் என்கிறார்கள். ஆனால், டாக்டர்களின் ஆலோசனையுடன் இவைகளை சாப்பிட வேண்டும்.
சிவப்பு, வெள்ளை என 2 வகையான முள்ளங்கிகள் உள்ள நிலையில், இதில் எந்த முள்ளங்கி சிறந்தது தெரியுமா? சிவப்பு முள்ளங்கியை பொறுத்தவரை, சிறு நீர்ப்பையை சுத்தமாக்கி சிறுநீரை முறைப்படுத்தக்கூடியது.. வயிற்று பூச்சிகளை அழிக்கக்கூடியது.. ஜீரணத்தையும் எளிதாக்கக்கூடியது.. குளிர்ச்ச்சி நிறைந்த காய் என்பதால், மூலநோய்க்கும் நிவாரணம் தரக்கூடியது.
சிவப்பு முள்ளங்கி: பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளைம், வெள்ளைப்படுதல் குறைபாடுகளையும் போக்கும் அதன்மை இந்த சிவப்பு முள்ளங்கிக்கு உண்டு.. அதேபோல, கண்ணெரிச்சலையும் தணிக்கக்கூடியது.. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் பலம் தரும் கிழங்கு என்பதால், இந்த முள்ளங்கியை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.. இதனால், வயிற்று புண்களும், உடல் சூடும் ஆறிவிடும். தோலில் உள்ள வறட்சியை நீக்கி, தோலை வழவழப்பாக்கும் தன்மை இந்த சிவப்பு முள்ளங்கிக்கு உண்டு.
வெள்ளை முள்ளங்கியும் இதுபோலவேதான்.. சிறுநீரை ஒழுங்குப்படுத்துகிறது.. மூலநோயை போக்கி, சீதபேதியை கட்டுப்படுத்துகிறது.. எலும்புக்கு பலம் சேர்க்கக்கூடிய இந்த வெள்ளை முள்ளங்கியை, மஞ்சள்காமாலை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வாத நோய்: ஆனால், வாத நோய் உள்ளவர்கள் இந்த முள்ளங்கியை தவிர்க்கலாம். அதேபோல, மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகமாக சாப்பிட்டால், மாதவிலக்கு அதிகமாகிவிடும். எனவே, அந்த நேரங்களில் முள்ளங்கியை தவிர்க்கலாம். குளிர்ச்சி நிறைந்த காய் என்பதால், குளிர்மழைக்காலங்களில் வயதானவர்கள், குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்கலாம்.
எவ்வளவுதான் நன்மைகளை தந்தாலும், சிலவகை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது முள்ளங்கி கிழங்கு, பக்க விளைவை தர வாய்ப்புள்ளது.. முக்கியமாக, முள்ளங்கியுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட்டால் இதயம் தொடர்பான பிரச்சனை வரலாம்.. எனவே, முள்ளங்கி சாப்பிட்டபிறகும் பாகற்காய் சாப்பிட கூடாது.. முள்ளங்கியுடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிட்டால் சரும பிரச்சனை வர வாய்ப்புள்ளதாம். பால் பொருட்களுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது.
மீன்கள்: அதேபோல, முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், கர்ப்பிணி பெண்கள் முள்ளங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முள்ளங்கியின் அதிகப்படியான நுகர்வு பசியின்மை, தொண்டை புண் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடுமாம். அதேபோல, முள்ளங்கியை ஆரஞ்சுப்பழத்துடன் சேர்த்து, அல்லது முள்ளங்கியை சாப்பிட்ட பின் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது கெடுதியை தருமாம்.












Click it and Unblock the Notifications