இடுப்பு கொழுப்பை கரைக்கும் அவல்.. குடல் புற்றுநோயை தடுக்கும் சிவப்பு அவல்.. சத்துள்ள வெள்ளை அவல்
சென்னை: தினந்தோறும் நமக்கு தேவையான அத்தனை சத்துக்களுமே அவலில் நிறைந்திருக்கின்றன. அவ்வளவு ஏன்? குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி கொண்டதுதான் இந்த அவல்.
கைக்குத்தல் முறையில் தயாராகும் அவலில், நார்ச்சத்துக்கள், வைட்டமின் B, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்றவை உள்ளன.. வெள்ளை அவலைவிட சிகப்பு அவலில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் உள்ளன.. ஆந்தோசயனின் என்ற நிறமி தான் சிவப்பு அவலுக்கு இந்த நிறத்தை கொடுக்கிறது.

பயன்கள்: அவல் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.. நார்ச்சத்து நிறைய உள்ளதால், குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. ரத்தத்தில் கொழுப்பின் அளவும் குறைகிறது.. உடல் எடை குறைப்போருக்கும், ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்களும், நீரிழிவு நோயாளிகளும் இந்த அவலை "குறிப்பிட்ட" அளவு தராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு, திடீர் சர்க்கரை அதிகரிப்பு நிலை உருவாகாமல் தடுக்கப்படுவதுடன், இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. அதைவிட முக்கியமாக, புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுப்பதில் சிவப்பு அவல் பெரும் பங்கு வகிக்கிறது..
சத்துக்கள்: காலை உணவில் இந்த சிவப்பு அவலை உட்கொள்ளும்போது, அன்றைய தினத்துக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நமக்கு கிடைத்துவிடுமாம். ஒரு கப் அவலில், 250 கலோரிகள் உள்ளன.. வறுத்த அவலில் 333 கலோரிகள் உள்ளன.. எனவே, காலை உணவுக்கு மிகச்சிறந்த உணவாக அவல் உள்ளது..
வழக்கமாக, பாலில் அவல் மற்றும் வெல்லம் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட தருவார்கள்.. ஆனால், அவலை வேக வைக்காமல் வெல்லம் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், கூடுதல் ஆரோக்கியம் கிடைக்குமாம்..
சிவப்பு அவல்: அல்லது சிவப்பு அவலில், உப்புமா, அவல் உருண்டை, அவல் லட்டு, அவல் கேசரி, அவல் பாயசம், சாலட் செய்து சாப்பிடலாம். அல்லது சிவப்பு அவலை பாலில் லேசாக ஊறவைத்து, தேங்காய்த்துருவல், ஏலத்தூள், நாட்டுச்சர்க்கரை குழந்தைகளுக்கு காலை உணவாக தரலாம்.
வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் கார்போ ஹைட்ரேட், கலோரி உள்ளதால், நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகமாகவே தருகிறது.. அத்துடன், உடலில் நல்ல கொழுப்பையும் அதிகரிக்க தூண்டுகிறது.
தயிர் + அவல்: அவலுடன், பாலும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டாலும் உடல் பலமாகும். அல்லது அவலுடன் மோர் கலந்து சாப்பிட்டாலும் உடலுக்கு குளிர்ச்சியும், சத்துக்களும் கிடைக்கும்.. ஆனால், அவலும் தயிரும் மட்டும் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. இது மந்தத்தன்மையை உருவாக்கிவிடுமாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications