Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆப்ப சோடா"வை இட்லி மாவில் கலக்கறீங்களா? தோசை மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்தால் என்னாகும்? பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் சோடா, பேக்கிங் சோடா, ஆப்ப சோடா என்று சொல்லப்படும் சோடா உப்பு நல்லதா? இதன் பலன்கள் என்ன? பக்க விளைவுகள் என்ன?

பேக்கிங் சோடாவை பொறுத்தவரை மிகச்சிறந்த ப்ளீச்சிங் கண்டிஷனர் என்றே சொல்லலாம்.. உதாரணத்துக்கு, முகம் பொலிவு பெறுவதற்காக பல்வேறு வகைகளில் இதனை பயன்படுத்தலாம்.

Do you know the Super Health Uses of Baking Soda and Can we add Baking Soda in the Idly Batter for soft Idli

ஆலிவ் எண்ணெய்: பேக்கிங் சோடாவை சோடியம் பைகார்பனேட் என்பார்கள். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட் போல கலந்து, பருக்கள் நிறைந்த சருமத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால், சரும பிரச்சனைகள் நீங்கும்.. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், சிறிது திராட்சை ஜூஸ், சிறிது ஆலிவ் எண்ணெய் இவைகளை கலந்து முகத்தில் தடவினால் போதும்.. நாளடைவில் பொலிவு பெறும் உங்கள் சருமம்.

அரை ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 2 ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தாலே உங்கள் முகம் பொலிவு பெறுவதை காணலாம். அதற்காக மிருதுவான சருமம் கொண்டவர்கள் இதை உபயோகிக்க கூடாது.. சருமத்தில் அலர்ஜி, எரிச்சல் வந்துவிடும்.

பாத வெடிப்புகள்: வெடிப்பு பாதங்களுக்கு, இந்த பேக்கிங் சோடா மருந்தாகிறது.. ஒரு பெரிய வாளியில், வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, அதில், சிறிது பேக்கிங் சோடாவையும் கலந்து, உங்கள் கால்களை அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி வந்தாலே, பாத வெடிப்புகள் மறையும். சிலர் பற்கள் வெண்மையாக மாறுவதற்கு இந்த சோடாவை பயன்படுத்துவார்கள். இது பல் எனாமலையே சிதைத்துவிடும்.
ஆனால், உணவில் இந்த சோடாவை சேர்ப்பது ஆரோக்கியமானது இல்லை என்கிறார்கள்.. வழக்கமாக, கேக், ரொட்டிகள், பிஸ்கட்கள் போன்ற கேக்கரி வகைகளில் இந்த பேக்கிங் சோடாவை சேர்ப்பார்கள்..

இட்லி மாவு: அதேபோல, உளுந்து வடை, இட்லி, தோசை மாவுகளிலும் சேர்ப்பார்கள்.. ஒரு சிட்டிகை சேர்த்தாலும், மல்லிகைப்பூ போல இட்லி வரவேண்டும் என்பதற்காக இதனை சேர்ப்பார்கள். எப்போதாவது இப்படி ஒரு சிட்டிகை சேர்த்தால் பரவாயில்லை.. எப்போது இட்லிக்கு மாவு அரைத்தாலும், அதில், பேக்கிங் சோடாவை சேர்ப்பது, பக்கவிளைவுகளை உண்டுபண்ணிவிடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

காரணம், இந்த சோடாவானது, காரத்தன்மை கொண்டது.. இதனால், ரத்தத்தின் காரத்தன்மையையும் மாற்றும் திறன் கொண்டது.. இந்த காரத்தன்மை அதிகரித்தால் உடலில் பிரச்சனை ஏற்படலாம்.. குறிப்பாக, சிறுநீரக செயல்பாடு பாதிக்கலாம்.. இந்த சோடியம் பைகார்பனேட் உடல் வளர்சிதை மாற்றத்தை மட்டுமல்லாமல், தசை உடலியலையும் பாதிக்கும் என்கிறார்கள். கல்லீரல் சர்க்கரையை கொழுப்பாக மாற்றிவிடும் சக்தி இந்த சோடாவிக்கு உண்டு..

வார்னிங்: இதிலிருக்கும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளுக்கும் பாதிப்பை தந்துவிடும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதுடன், நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் குறைத்துவிடுமாம்..

இந்த சோடாவிலுள்ள பாஸ்போரிக் அமிலமானது, வயிற்றிலிருக்கும் அமிலத்துடன் தொடர்பு கொண்டு செரிமானத்தை குறைத்துவிடும்.. ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் தடுத்து நிறுத்திவிடும்.. எனவே, அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+