முருங்கைக்கீரை ஸ்பெஷாலிட்டி.. கீரைகள் சூப்பர்.. நிறைய கீரை சாப்பிடுவீங்களா? "அந்த" பிரச்சனை வருமாமே?
சென்னை: கீரைகள் ஏன் நமக்கு மிகவும் அவசியமாகின்றன.. எனினும், கீரைகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா?
ஒவ்வொரு கீரையும், ஒவ்வொரு தனித்துவத்தை பெற்றிருக்கின்றன.. ஒருசில கீரைகளை மட்டுமே நாம் உணவில் சமைத்து வந்தாலும், அனைத்து கீரைகளிலுமே, ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கவே செய்கின்றன..

சத்துக்கள்: சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் C போன்ற முக்கிய மூலப்பொருட்கள் அதிகம் உள்ளன.. கீரைகளை சாப்பிடுவதால் ரத்த விருத்தி அதிகமாகும்.. ரத்தசோகை பிரச்சனை தீருவதுடன், ரத்த சுத்திகரிப்புக்கும் கீரைகள் உதவுகின்றன.. பெண்களுக்கு ஏற்படும் ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்க்க முருங்கைக்கீரையே போதும்..
அதேபோல, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கீரைகளை சுத்தமாகவும், முறையாகவும் சமைக்க வேண்டும். கீரைகளில் ஓட்டை இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
மண் - புழுக்கள்: நிறைய மண், சிறுபுழுக்கள் இருக்கும் என்பதால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் கீரைகளை போட்டு வைத்து 2 நிமிடம் கழித்து பார்த்தால், கீரையிலுள்ள மண், பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும். பிறகு கீரைகளை மட்டும் எடுத்து அலசலாம்..
பொடியாக நறுக்கிவிட்டு, கீரைகளை அலச கூடாது.. அதிக நேரம் சமைக்க கூடாது.. நிறைய வெந்துவிடவும் கூடாது.. தண்ணீர் குறைவாக ஊற்றி வேக வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்த கூடாது. கீரைகளை பொரித்தும் சாப்பிடகூடாது.. கீரைகளை சமைக்கும்போது, மூடி போடக்கூடாது.
தயிர் கீரை: தயிருடன் கீரையை சாப்பிடக்கூடாது.. கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார்சத்துகளை ஜீரணிக்கக் கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும்.. அதனால் கீரை ஒருவித மந்த நிலையை உருவாக்கிவிடும். பாலக்கீரையுடன் எள் கலந்த உணவை சாப்பிடக்கூடாது.. இறைச்சியுடன் கீரையை சேர்த்து சாப்பிடக்கூடாது.. கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிவிடும்..
அகத்திக்கீரைக்கு, மருந்துகளை முறிக்கும் தன்மை உண்டு என்பதால், சித்த மருந்துகள் சாப்பிடும்போது அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது. அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது... மது அருந்தியபிறகு, இந்த அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு, இதயம் தொடர்பான பாதிப்புகள் வரலாம்.
நச்சு விளைவு: கீரைகளை அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?உடலில் நச்சு விளைவை உண்டுபண்ணிவிடுமாம். அதிக நார்ச்சத்து வாயு, வீக்கம், பிடிப்புகள், வயிற்று கோளாறுகள் ஏற்பட்டுவிடும்.. அதனால், சிறுநீரகக்கல் பாதிப்பு இருப்பவர்கள், நிறைய கீரை சாப்பிடக்கூடாது.. இதனால், ஆக்ஸாலிக் அமிலம் அதிகமாகி, பிறகு, அதனை வெளியேற்றுவது சிரமமாகிவிடும்.
மூட்டு பிரச்சினை இருப்பவர்களும், மூட்டு வலி, வீக்கம் உள்ளவர்களும் அதிக கீரைகளை சாப்பிடக்கூடாது.. கீல்வாதம் பிரச்சனை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.. கீரைகளில் அமிலம் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியத்துடன் இணையும்போது, தாதுப்பற்றாக்குறையை உண்டாக்கிவிடும்.
நைட்ரேட்கள்: கீரை வகைகளில், நைட்ரேட்கள் நிறைய உள்ளன. இது உணவு செரிமான மண்டலத்தில் பாதிப்பை தராது என்றாலும், பச்சிளம் குழந்தைகளுக்கு கீரை வகைகளை அதிகம் சாப்பிட கொடுத்தால், அவர்களுக்கு செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
நிறைய கீரைகளை சாப்பிட்டால், உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.. இதனால் வளர்சிதை மாற்றம் தடைபடும்.. நிறைய சாப்பிட்டு செரிமான பிரச்சனை ஏற்பட்டால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, பேதி, காய்ச்சல் ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளி: வைட்டமின் K கீரையில் உள்ளதால், ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த கீரை வகைகள் கெடுதலை தந்துவிடும்..
அதேபோல, குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோயாளிகள், எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் கீரையில் உள்ள வைட்டமின் K இணைந்து, ரத்த அழுத்தத்தை மிகவும் குறைந்த அளவு கொண்டதாக மாற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமாம்.












Click it and Unblock the Notifications