முருங்கைக்காய் முதல் முருங்கையிலை வரை.. ஆச்சரிய குச்சிகளும், அதிசய பூக்களும்.. பெண்களின் வரப்பிரசாதம்
சென்னை: முருங்கை என்றாலே பெண்களுக்கு அருமருந்தாகக்கூடிய கீரையாகும்.. முருங்கை ஈர்க்குகள் பெண்களுக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? முருங்கை விதைகளை வைத்து என்ன செய்யலாம்?
பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே பல பிரச்சனைகள் வந்துசேரும்.. முருங்கைக்கீரையில், இலை, பட்டை, பூ, வேர் போலவே, மிகவும் உபயோகத்துக்கு உரியது முருங்கை ஈர்க்கு ஆகும்.. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன..

மெனோபாஸ்: பெண்களுக்கு மேனோபாஸ் பிரச்சனையின்போது, மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு இப்படி பல உபாதைகள் ஏற்படும்.. அவர்கள் இந்த முருங்கை ஈர்க்குச்சியை உணவில் சேர்த்துக் கொண்டால், உபாதைகள் தீரும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்.
இந்த குச்சிகளை வைத்து ரசம் செய்யலாம். சூப் போல செய்யலாம்.. கசாயம் போல செய்து குடிக்கலாம். முருங்கை குச்சிகளை, தண்ணீரில் போடு கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தாலே, வாய்ப்புண்கள் ஆறுவதுடன், ஈறுகளில் உள்ள தொற்றுக்களும் நீங்கிவிடும்.
இரும்பு சத்து: முருங்கைக்கீரையில் உள்ள குச்சிகளைதான் ஈர்க்கு என்று சொல்வார்கள். இந்த குச்சிகளிலும், ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.. முக்கியமாக கால்சியம் நிறைய உள்ளது.. இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது.
இவை இரண்டுமே, 40., 45 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மேனோபாஸ் சமயத்தில் கட்டாயம் தேவைப்படும் சத்துக்களாகும். இதுபோன்ற நேரங்களில் மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுவதால், ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது..
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முருங்கை ஈர்க்குச்சி வைத்து சூப் அல்லது கஷாயம் செய்து சாப்பிட்டாலே போதும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்... அளவுக்கு அதிகமான அசதியும் நீங்கும்.
இந்த கஷாயம் எப்படி செய்வது: முருங்கை குச்சிகளை கழுவி சுத்தம் செய்து, அதை இடித்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இடித்த ஈர்க்குச்சிகளை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, மிளகு, சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.. அடுப்பில் ஒரு வாணல் வைத்து, எண்ணெய், கடுகு, கறிவேப்பில்லை, பெருங்காயம் தாளித்து, கொட்டினால் சூப் ரெடி.
அதேபோல, இவைகளை பயன்படுத்தி கஷாயம் செய்யலாம்.. முருங்கை ஈர்க்கு , வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு , கறிவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்திக்கொள்ளவும்.
வயிறு இரைச்சல்: ஒரு பாத்திரத்தில் அனைத்து ஈர்க்குகளையும் சேர்த்து, இவைகளுடன் வசம்பு சேர்த்து நன்கு கருக்க வேண்டும். பிறகு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வைத்து, சுண்ட காய்ச்சி இறக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், வயிறு சம்பந்தமான பிரச்சனை தீரும். வயிற்று இரைச்சல் , வயிற்றுப்பொருமல், ஜீரணக் குறைபாடுகள் நீங்கும்..
அதேபோல, பருப்பு வேகவைத்து எடுத்து, அதில் ஈர்க்குச்சிகளை கழுவி சேர்த்து சாம்பார் செய்யலாம். அதேபோல, கூட்டு செய்யலாம்.. பருப்பு வேக வைத்து எடுத்து கொண்டு, ஒரு வாணலில் எண்ணெய், தக்காளி, வெங்காயம் தாளித்து, முருங்கை குச்சிகளை சேர்த்து கொட்டி வதக்கிவிட வேண்டும். இதில், பருப்பை கொட்டி வேகவைத்து இறக்கினால் கூட்டு ரெடி.
மாதவிடாய்: கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு இரண்டையும் சேர்த்து ரசம் போல வைக்கலாம்.. இவை இரண்டுமே ரத்தவிருத்திக்கு உதவக்கூடியவை.. இவை இரண்டையும் வைத்து துவையல் போலவும் செய்யலாம்.
மாதவிடாய் நேரத்தில், இந்த துவையல் மிகவும் பெண்களுக்கு கைகொடுக்கும். சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், ஜீரண கோளாறுகளும் நீங்கும்.. அதேபோல, முருங்கைக்காயிலுள்ள விதைகளை வைத்தும் சூப் செய்து சாப்பிடலாம்.. முருங்கைக்காய்களை வேகவைத்து, அதிலுள்ள விழுதுகளை வழித்து எடுத்து, சூப் செய்தால், ருசியாக இருக்கும்.
கீரை சூப்: முருங்கை கீரையை சூப்பாக சாப்பிட்டாலும், பெண்களுக்கு உள்ள உடல்நலக்கோளாறுகள் நங்கும்.. இதற்கு ஒரு கைப்பிடி முருங்கை கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 4 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, நான்கைந்து சின்ன வெங்காயம், சிறிய தக்காளி, மஞ்சள் துாள் என அனைத்தையும், தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்து விட்டு, மற்றவைகளை மிக்சியில் அரைத்து, வடிகட்டிய தண்ணீருடன் கலந்துவிட வேண்டும்.. இப்போது ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், கருவேப்பிலை தாளித்து கொட்டி, மிளகு தூள் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகச்சிறந்த சூப்பாக இது அமையும்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications