Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டுக்கால் கிழங்கு.. முடக்குவாதத்தை ஓட்டும் சைவ முடவாட்டுக்கால்.. ஆயுசை கூட்டும் முடவன் ஆட்டுக்கால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசை பிடிப்பு இப்படி அனைத்துக்குமே தீர்வு தரக்கூடிய அற்புதமான உணவு என்றால், அது சைவ ஆட்டுக்கால் கிழங்குதான்.

முடக்கு வாதம் என்றாலே, அது எலும்பு தொடர்பான நோய் அல்லது மூட்டுவலி என்பது போல கருதிவிடுகிறார்கள்.. பல நோய்களின் கூட்டுதான் இந்த முடக்கு வாதம்.. 500 வகைகளுக்கு மேல் இந்த முடக்குவாதம் உள்ளதாம்..

Do you know the Wonderful Health Benefits in Mudavatukaal Kilangu and Aattukkaal Kizhangu Juice is the Best for all

மூட்டுவலிகள்: மூட்டு, தசைகள், இணைப்பு திசுக்கள் இப்படி பலவற்றுடன் தொடர்புடையதாக இருப்பதால்தான், உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிப்பை சந்திக்கின்றன. முக்கியமாக உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை செய்யப்பட்டுவிடும். ஆனால், ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம்.

ஒருவேளை இதை கவனிக்காமலேயே விட்டுவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். நீரிழிவு நோயை போலவே, முடக்கு வாதத்தையும் பூரணமாக குணமாக்க முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...

இறைச்சி: முடக்குவாதத்தை தவிர்க்க, உணவில் பெரும்பாலும் கவனம் செலுத்தினாலே போதும்.. குறிப்பாக, சர்க்கரையை தொடக்கூடாது.. எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆல்கஹால், போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, பச்சை காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

இதில் முடவாட்டுக்கால் நல்ல பலனை தருகிறது.. வயதானவர்களின் எலும்புகளுக்கு பலத்தை தந்து கால்களை உறுதியாக்கும் தன்மை இந்த ஆட்டுக்கால் கிழங்குக்கு உண்டு.

ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்று பல பெயர்கள் இதற்கு உண்டு.. ஏற்காடு மலைவாசிகள் இதனை ஆட்டுக்கால் சைவம் என்பார்கள்.. சேர்வராயன் மலையில், இதனை "ஆட்டுக்கால்" என்பார்கள். கொல்லி மலையில் "முடவன் ஆட்டுக்கால்" என்பார்கள்.

தசைபிடிப்புகள்: கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் நிறைந்த முடவாட்டுக்கால், முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மருந்தாகிறது.

ஆட்டுக்கால் கிழங்கு என்பதால், இது கிழங்கு வகை கிடையாது.. இது ஒரு தாவரம்.. ஏற்காடு, கொல்லிமலை, சேர்வராயன் மலை, சதுரகிரி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது. கம்பளி தோற்றத்தில், ஆட்டின் கால் குளம்புகளை போல காணப்படும்.. ருசியும் ஆட்டுக்கால் போலவே இருப்பதால்தான், சைவ ஆட்டுக்கால் என்பார்கள்.

கிழங்குகள்: எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோய்களுக்கு சிறந்த தீர்வை இந்த கிழங்குகள் தருகின்றன.. அதேபோல, ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இந்த கிழங்குக்கு உண்டு. எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் தீர்த்துவிடும்.. காய்ச்சல், செரிமான பிரச்சனைகளுக்கும், மிகவும் நல்லது.

பெரும்பாலும் இந்த கிழங்கை, தோல் சீவி கழுவி, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து போட்டு, சூப் போல வைத்து குடிப்பார்கள். கை, கால் வலி, காய்ச்சல் என்றெல்லாம் மலைவாசிகள் ஆஸ்பத்திரிக்கே போகாமல் இருப்பதற்கு காரணமே இந்த கிழங்குதான்.. பக்கவிளைவுகளை தராத கிழங்கு என்பதால், மலைவாழ் மக்களிடம் இதற்கு மவுசு அதிகம்.

இது ஒரு சீசன் கிழங்கு என்பதால், மற்ற நேரங்களில் இந்த கிழங்கின் மேல் பகுதி சுருங்கிவிடும்.. இதனால் உள்ளேயிருக்கும் கிழங்கும் சுருங்கி நீர்ச்சத்து போய்விடும். எனவேதான், இதை பதப்படுத்துவதற்காக மணல்களில் புதைத்து வைப்பார்களாம்.

வாதநோய்: இதைத்தவிர, கர்ப்பப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த மருந்தாக இந்த முடவாட்டுக்கால் கிழங்கு உதவுகிறது.. இந்த கிழங்கை பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைத்தால் வாத நோய் விலகிவிடும் என்பார்கள். அதேபோல, இந்த கிழங்கின் மேல் பகுதியை சுத்தம் செய்து, வெந்நீரில் போட்டு குளித்து வந்தால், சரும அலர்ஜி, அரிப்பு, சொறி, சிரங்கு விலகிவிடுமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+