குளுகுளு துத்தியிலை..மாதவிலக்கு முதல் உடல்சூடு வரை ஓட்டும் துத்திக்கீரை! பெண்கள் தவிர்க்கவே கூடாதாம்
சென்னை: பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் துத்திக்கீரையை பற்றி தெரியுமா? இதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?
இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது.. எனவே, உடல் சூடு உள்ளவர்களுக்கு இது மருந்தாகிறது.. அதனால்தான், இந்த கீரையை, மூலநோய்க்கு மருந்தாக இன்றுவரை பயன்படுத்துகிறார்கள். மூல நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்துக்கு ஒருமுறை இந்த கீரையை அரைத்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தாலே, மூலநோய் கட்டுக்குள் வருமாம்.

குளுமை கீரை: சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண்கள், உடலிலுள்ள கட்டிகள், புண்கள், அத்தனை உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த கீரை சரிசெய்கிறது. உடல் குளிர்ச்சி பெற பெரும்பாலும், பசும்பாலுடன் துத்திஇலையை பொடி செய்து சாப்பிடுவார்கள். உடலில் கட்டிகள் இருந்தாலும், இந்த குளுகுளு இலையை அரைத்து கட்டினால் நிவாரணம் கிடைக்கும்.
பெண்களுக்கு துத்திக்கீரை ஒரு அருமருந்தாகும்.. காரணம், கர்ப்பப்பை கோளாறுகளை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யக்கூடிய தன்மை இந்த துத்திக்கீரைகளுக்கு உள்ளது..
மாதவிலக்கு: அதேபோல, மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிறு வலியை இந்த கீரை சரிசெய்துவிடும்.. அதிக உதிரப்போக்கும் இருந்தாலும், இந்த கீரையை சமைத்து சாப்பிடும்போது, அவை கட்டுக்குள் வரும்.
அல்லது சாறு போல பயன்படுத்தி கொள்ளலாம்.. அதாவது, ஒரு கைப்பிடி துத்தி இலையை சுத்தம் செய்து, நன்றாக அலசி, தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். இதில், சுட்டு கரியாக்கிய வசம்பு கரியை சிறிது சேர்த்து வெறும் வயிற்றில் 3 நாள் குடித்து வந்தாலே மாதவிலக்கு வலி தீர்ந்தும். அதிக ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும்.
அதுமட்டுமல்ல, வெள்ளைப்படுதல் கோளாறுகளை இந்த கீரை சரிசெய்யும்.. எனவே, வெள்ளைப்படுதல் ஆரம்ப கட்டமாக இருந்தால், உடனே இந்த கீரையை சமையலில் பயன்படுத்தலாம்.
குறைபாடுகள்: அதேபோல, வாரத்துக்கு ஒருமுறையாவது, துத்திக்கீரையை பசும்நெய்யும் வதக்கி சமைத்து சாப்பிடும்போதும், வெள்ளைப்பாடு குறைபாடு மெல்ல குறைய துவங்கும்.. இந்த துத்தி இலையை சுத்தம் செய்து, கழுவி, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.
அல்லது இந்த கீரையின் விதைகளையும் தூள் செய்து, வெந்நீரில் கலந்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.. அதேபோல, பாசிப்பருப்பு வேகவைத்து துத்தி இலைகளை சேர்த்து நெய் சேர்த்து வதக்கி சாதத்தில் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடும்போதும் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் அடங்கும்.
கஷாயம்: துத்தி செடியின் இலைகள் மட்டுமல்ல, இந்த செடியின் பூ, காய், வேர் போன்ற பாகங்களை பறித்து, சுத்தம் செய்து, கஷாயம் போல காய்ச்சி குடித்து வந்தால், பெண்களுக்கு மிகவும் நல்லது. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று இந்த கீரையை பெண்கள் பயன்படுத்தலாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications