முட்டையை பச்சையாக குடிக்கலாமா? மஞ்சள் கருவால் மாரடைப்பு வருமா? கலக்கி சாப்பிடலாமா?
சென்னை: முட்டையை எப்படியெல்லாம் சாப்பிடலாம், எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது முட்டை. இந்த முட்டையை பலர் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. முட்டை சைவத்தில் கூட சேர்த்துள்ளார்கள். அதனால் சைவ பிரியர்களும் சிலர் முட்டையை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
கோழி வந்ததா, முதலில் முட்டை வந்ததா என்ற ஆராய்ச்சிகளுக்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் இந்த முட்டையில் எத்தனை சத்துகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளி சத்துணவுகளில் முட்டை கட்டாயமாக பரிமாறப்படுகிறது. ஒரு வேளை அந்த குழந்தை சைவமாக இருந்தால் கொண்டை கடலை பரிமாறப்படுகிறது. முட்டையில் புரதம் ரிபோபிளேவின், போலேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், செலினியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, இ, பி6 உள்ளிட்டவை அதிகமாக உள்ளன.
இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எனவே இதை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. முட்டையில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன.
இவை நம் கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முட்டையில் உள்ள கோலைன் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சினைகளை குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்க உதவுகிறது. முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டையை தினமும் சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்தும் குறையும் என்கிறார்கள். உடல் எடை குறைப்பதற்கும் இந்த முட்டை பயனளிக்கிறது. எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கிறது. லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் , கண் நோய் வராமலும் கண் புரை ஏற்படாமலும் தடுக்கும். மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு இருப்பதால் இதய நோய் வர வாய்ப்பு என சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடந்த ஆராய்ச்சிகள் அவை தவறு என ஆதாரப்பூர்வமாக நிரூபித்தன.
முட்டையின் நன்மைகளை பார்த்தோம். ஆனால் முட்டையை எப்படியெல்லாம் சாப்பிடலாம், எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்வோம். முட்டையை முழுவதுமாக வேக வைத்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம். முட்டையை மஞ்சள் கருவுடன் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

இந்த முட்டையை நன்கு வேக வைத்தால் மட்டுமே அதில் உள்ள சால்மோனெல்லா பேக்டீரியாக்களை முழுமையாக அழிக்க முடியும். முட்டையை ஆஃப் பாயில், கலக்கி, பச்சையாக குடிப்பது போன்றவை கிருமித் தொற்றுகளை ஏற்படுத்தும் ரிஸ்க் உள்ளது என்கிறார் டாக்டர் பரூக் அப்துல்லா. இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், முட்டையை மஞ்சள் கருவுடன் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழுப்பயனை அடைய முடியும். மேலும் நன்றாக வேக வைத்து / சமைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள சால்மோனல்லா போன்ற பாக்டீரியாக்களை முழுமையாக அழிக்க முடியும் . முட்டையை ஹாஃப் பாயில் , கலக்கி , பச்சையாக குடிப்பது போன்றவற்றில் கிருமித் தொற்று ரிஸ்க் உண்டு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். முட்டை என்பது எனது அன்றாட வாழ்க்கையில் உணவுத் தட்டில் முக்கியமான அங்கம் வகிக்கிறது. நல்ல புரதமும் தேவையான கொழுப்பும் இன்றியமையாத கொலஸ்ட்ராலும் தரும் என டாக்டர் பரூக் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications