யூரிக் ஆசிட் இருக்கறவங்க இதை மட்டும் விட்றாதீங்க.. யூரிக் அமிலத்தை குறைக்கும் இலைகள்.. பலே திரிபலா
சென்னை: யூரிக் ஆசிட் அமிலம் ஏன் நம்முடைய உடலில் சுரக்கிறது? இந்த அமிலம் அதிகமாக சுரக்கும்போது ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன? யூரிக் அமில ஆசிட் அதிகரிப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள் உள்ளனவா?
நாம் உண்ணும் உணவுகளிலுள்ள "ப்யூரின்" என்ற சேர்மமானது ஜீரணிக்கும்போது யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது.. இது நம்முடைய உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவாகும். பெரும்பாலும், சிறுநீரின் மூலமே, இந்த யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது...

அதாவது, நம்முடைய கல்லீரலில் சுரக்கும் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படும் யூரிக் அமிலத்தின் அளவு சீரானதாக இருக்க வேண்டும்... அதாவது, ஒரு சாதாரண நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டுமாம்.. இந்த அளவை தாண்டினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வந்துவிடும்.
மூட்டு வலிகள்: உடலில் உற்பத்தி செய்யும் அளவை விட, வெளியேறும் யூரிக் அமிலத்தின் அளவு குறைவாகும்போது, இவை உடலில் குறிப்பாக மூட்டுகளுக்கு இடையில் தேங்கி நின்று, வலியையும், வீக்கத்தையும் உண்டுபண்ணிவிடும்.. யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருந்தால் கீழ்வாத பிரச்சனையை உண்டாக்கிவிடும்.. அத்துடன், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்... எலும்புகள் பலவீனமாகி முறிவு ஏற்படுதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்.
மதுப்பழக்கம் உள்ளவர்கள், இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு உடலில் ப்யூரின் அளவு அதிகரிக்க செய்யலாம். அன்னாசி, சப்போட்டாவிலும் யூரிக் அளவை அதிகரிக்க செய்துவிடும்.
சிகிச்சைகள்: எனவே உடலிலுள்ள யூரிக் ஆசிட்டின் அளவை கட்டுக்குள் வைப்பது அவசியமாகும்.. இந்த யூரிக் அமில அளவினை கட்டுப்படுத்த வேண்டுமானால் ஏராளமான மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. சித்த, ஆயுர்வேதத்தில் இதற்கென ஸ்பெஷல் சிகிச்சைகள் ஏராளமான உள்ளன..
எனினும், ஆரம்பக்கட்டம் என்றால், வாத, பித்த, கபம் சமநிலையில் செயல்பட வைக்கக்கூடிய இலைகள், மூலிகை பொருட்களை கொண்டும், வீட்டிலேயே இயற்கையான முறையில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம். எனவே, ப்யூரின் அளவை குறைக்க செய்யும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.
திரிபலா சூரணம்: இதற்கு திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலா சூரணம், இயற்கையான மலமிளக்கியாக உள்ளதால், யூரிக் ஆசிட் லெவலை கட்டுப்படுத்த துணைபுரிகிறது. அரை டீஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து. இரவு உணவுக்கு முன்பு குடித்தால், யூரிக் அமிலம் குறைக்கும்.. எனினும், டாக்டர்களின் ஆலோசனை பெறாமல் இதனை சாப்பிடக்கூடாது.
பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செள செள, வெண்டைக்காய், சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வந்தால், ப்யூரின் அளவை குறைக்க முடியும்..
பருப்பு, காய்கறிகள்: பாதாம், வால்நட் போன்றவையும் யூரிக் அமில அளவை குறைக்க செய்யும் என்பதால், இதனை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.. சிறுதானியங்கள், வர எண்ணெய்கள் போன்றவைகளை பயன்படுத்தும்போதும், ப்யூரின் அளவு குறையும்.
சமையலில் நிறைய கறிவேப்பிலை, புதினா, பிரிஞ்சி இலை, கொத்தமல்லி போன்றவைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.. இந்த இலைகள் உடலிலுள்ள நச்சுக்களை அழிக்கக்கூடியவை.. யூரிக் அமிலத்தை வெளியேற்றும் சக்தி கறிவேப்பிலைகளுக்கு உள்ளது.. ரத்தத்தில் யூரிக் அமிலம் தேங்கியிருந்தாலும், அவைகளை சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடுமாம்..
புதினாவை எடுத்துக் கொண்டால், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் A., ஃபோலேட் சத்துக்கள் உள்ளதால், சிறுநீரில் உள்ள பியூரின்கள் வெளியேறும்... புதினா உடலையும் நச்சு நீக்குகிறது.. கொத்தமல்லியில், கால்சியம், பொட்டாசியம், தியாமின், பாஸ்பரஸ், வைட்டமின் C, K உள்ளதால், ரத்தத்திலுள்ள கிரியேட்டினின் அளவையும் யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது. எனவே, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இந்த மூன்றையும் வைத்து சட்னி அரைத்து சாப்பிடலாம்.
பிரியாணி இலை: அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த வெந்தயத்தை உணவில் அதிகம் பயன்படுத்தினால், யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும். பிரிஞ்சி இலையை வெறுமனே தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். வெற்றிலை பாக்கு மென்று விழுங்கினாலும், ஜீரணம் எளிதாகி, சிறுநீர் மூலம் யூரிக் அமிலம் வெளியேறும்.












Click it and Unblock the Notifications