இலவங்கப்பட்டை இருக்கா? கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும் சூப்பர் உணவுகள்.. தம்பதி மிஸ் பண்ணாதீங்க
சென்னை: விந்தணு உற்பத்தி மற்றும் கருமுட்டை வளர்ச்சி இவைகளுக்கு அடிப்படையே சத்தான உணவுகள்தான்.. விந்தணு, கருமுட்டை இவைகளின் ஆரோக்கியத்துக்கு உணவுகளும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில், ஒருசில உணவு வகைகளை பார்ப்போம்.
சமீபகாலமாகவே, உலகம் முழுவதுமே ஆண்களின் விந்தணு எண்ணிக்கையானது குறைந்து வருவதாக கூறப்படுகிறது.. அதாவது, 53 நாடுகளில் ஆண்களின் விந்தணுக்கள் குறைந்தது உறுதியாகி இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆய்வுகள்: கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, Human Reproduction Update என்ற ஆய்விதழில், ஆண்களில் விந்தணுக்கள் குறைவு குறித்து சர்வேயின்படி, கடந்த 1973 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாம்.. முக்கியமாக, விந்தணுக்களின் அடர்த்தி 51.6 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கையும் 62.3 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வில் வெளியிடப்பட்டிருந்தது.
விந்தணு பெருகுவதற்கு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிர்க்க வேண்டும். மன அமைதியும், முறையான தூக்கமும், அவசியம். அதேபோல உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்..
மத்தி மீன்கள்: சால்மன், மத்தி போன்ற மீன்கள், வாட்நட்ஸ், ஆளிவிதைகள், சியா விதைகள் போன்ற கொட்டைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். காரணம் இவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், விந்தணுக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதேபோல, வைட்டமின் E சத்துக்கள், வைட்டமின் B9 சத்துக்கள் நிறைந்த இலை கீரைகள், பருப்பு வகைகள், வலுவூட்டப்பட்ட தானியங்களையும் தவறவிடக்கூடாது.
சூரியகாந்தி விதைகள், பிரேசில் கொட்டைகள், சிப்பிகள் போன்றவைகளில் செலினியம், ஜிங்க், வைட்டமின் B12, புரதம் உள்ளதால், விந்தணு ஆரோக்கியத்தில் இவைகளுக்கு நிறைய பங்கு உள்ளன.
கொழுப்புகள்: பெண்களுக்கும் கருமுட்டை வளர்ச்சிக்கு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவையாக உள்ளன. புரதம், கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை சீரான அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
குறிப்பாக, அவகேடோ பழங்கள் பெருமளவில் கை கொடுக்கிறதாம்.. அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அவகேடா உதவுகிறது..
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் வைட்டமின் B, E உள்ளதால், சினை முட்டை ஆரோக்கியமாகை வைத்திருக்க உதவும்.. முட்டைக்கோஸில் D உள்ளதால், இண்டோல் மீதேன் என்ற ரசாயனம் உள்ளதால், ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இது கர்ப்பப்பையில் சிக்கலை ஏற்படுத்தாமல் உதவும்.
வாழைப்பழம்: பச்சை காய்கறிகள், ப்ரக்கோலி, முட்டை, எள், பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் வாழைப்பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். கீரைகளில் முருங்கைக்கீரை மிகவும் நல்லது.. பழங்களில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை சீரான அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மஞ்சளை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.. லவங்கப்பட்டை கருவுறுதலுக்கு சூப்பர்ஃபுட் என்பார்கள்.. ஏன்னறால், கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இன்சுலினை எதிர்ப்பதற்கும், சரியான முட்டை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், இந்த லவங்கப்பட்டை பேருதவி புரிகிறது..
மஞ்சள்: எனவே, மஞ்சளை போலவே, லவங்கப்பட்டையையும் அதிகமாக உணவில் பெண்கள் சேர்த்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கால் டீஸ்பூன் லவங்கப்பட்டை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மிகவும் நல்லது.
ஆனால், வளர்ச்சிதை மாற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடிய, கொழுப்பு நிறைந்த எண்ணெய் பொருட்கள், சிப்ஸ், ஃபிரெஞ்சு ஃபிரைஸ் போன்றவற்றை தவிர்க்கலாம்.
டாக்டர் ஆலோசனை: பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவு, கேக், குக்கீஸ், வெள்ளை பிரெட் உள்ளிட்ட பேக்கரி பொருட்களையும் தவிர்க்கலாம். கூல்டிரிங்க்ஸ், ஜூஸ்களில் சர்க்கரைக்கு பதிலாக, தேன், பனைவெல்லம் , நாட்டுச்சர்க்கரை சேர்த்து அளவுடன் சாப்பிடலாம். எனவே, தம்பதியினர் மருத்துவர்களை அணுகி, முறையான ஆலோசனையை பெற்று, தகுந்த உணவினை கடைப்பிடிக்கலாம்..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications