மாம்பழம் அதிகமா சாப்பிடுறீங்களா? இதையும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.. சில பாதிப்புகளும் வருமாம்
சென்னை: மாம்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு எத்தனையோ நன்மைகள் இருந்தாலும்.. அளவுக்கதிமகாக சாப்பிட்டால் சில விளைவுகளும் ஏற்படுமாம். மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன மாதிரியான ரியாக்ஷன்கள் உடலில் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.
முக்கனிகளில் ஒன்று மாம்பழம். நாவில் எச்ச்சில் ஊற வைக்கும் இனிப்புச்சுவை கொண்ட மாம்பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்திற்கான சீசன் கோடைக்காலம் தான்.

மாம்பழம்: கோடைக்காலம் வந்து விட்டால் போதும் பழக்கடைகளுக்குள் என்ட்ரி கொடுத்ததும் முதலில் நம்மை வரவேற்பது மாம்பழம் ஆகத்தான் இருக்கும். பழக்கடையை கடந்து போனாலே வாசனையை சுண்டி இழுக்கும் மாம்பழங்கள்.. கடைகளில் மலைப்போல் அடுக்கி வைத்திருப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை ருசிக்காதவர்களே இல்லை என்று சொல்லிவிட முடியும்.
விலை மலிவாக இருக்கும் என்பதோடு அதிக சத்து நிறைந்த பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு எத்தனையோ நன்மைகள் இருந்தாலும்.. அளவுக்கதிமகாக சாப்பிட்டால் சில விளைவுகளும் ஏற்படும்.
முகப்பரு ஏற்படும்: மாம்பழத்தில் வைட்டமின் ஏ, நார்சத்து, கார்போஹைட்ரேட், சர்க்கரை சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. குறிப்பாக பழத்தின் தோல்பகுதியில் வைட்டமின் சி சத்து உள்ளது. நம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவையும் கிடைக்கிறது.
அதேவேளையில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன மாதிரியான ரியாக்ஷன்கள் உடலில் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவதால் முகப்பரு ஏற்படலாம். ஏனெனில் மாம்பழங்களில் உள்ள அளவுக்கதிமான இனிப்புச்சுவையே அதற்கு காரணம். தோல் எரிச்சலை அதிகப்படுத்தும்.
உடல் எடை கூடும்: மாம்பழங்களில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அதிகம். ஆகவே மாம்பழங்களை அதிகம் எடுத்து சாப்பிட்டால் உடல் எடையை கூட்டும். கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிரக்க வேண்டும். அதிகமாக மாம்பழங்கள் சாப்பிடுவது வயிற்றில் அஜீரணக்கோளாறு ஏற்படுத்தும். உப்புசம், வயிற்றுப்போக்கு போன்றவை கூட வரலாம்.
எவ்வளவு சாப்பிடலாம்: மாம்பழங்கள் அதிகம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக கூடும். இதனால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிடக்கூடாது. அதேபோல நெஞ்சு எரிச்ச்சலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாம்பழங்களில் அதிக இனிப்புச்சத்து உள்ளதால், பற்களில் கேவிட்டி பிரச்சினைக்கு வழிவகுக்குமாம்.. அப்போ எவ்வளவுதான் ஒருநாளைக்கு மாம்பழம் சாப்பிடலாம் என்று கேட்கிறீர்களா.. சுமார் 300 கிராம் அளவு சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்...
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications