Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீன் செய்றீங்களா? அப்ப கணவாய் மீனை விட்றாதீங்க.. ஆணின் அருமருந்து கணவாய் மீன்கள்.. ஆச்சரிய கனவா மீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முள்ளும் இல்லாமல், முதுகெலும்பும் இல்லாமல் ஒரு மீன் இருக்குமானால், அதுதான் கணவாய் மீன்கள்.. இதற்கு கடம்பா மீன்கள் என்றும் சொல்வார்கள். ஏகப்பட்ட நன்மைகளை தரக்கூடியது இந்த மீன்.

squid fish என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.. கணவாய் மீன்களிலேயே பல வகைகள் இருக்கின்றனவாம்.. பார்ப்பதற்கு ஆப்டோபஸ் போலவே இருக்கும்.. இந்த மீனின் கண்களே பெரிய சைஸில் இருக்கும்.. இதன் பற்களை பார்த்தால், ரம்பம் போல இருக்கும்.. உதடுகளை பார்த்தால் பலமாக இருக்கும்.. இதன் தலையில் 8 கைகள் இருக்கும்.. வாலில் 2 துடுப்புகள் இருக்கும்.

Do you Know what are the Health Benefits in Kanavai Meen and Amazing Medicine in the Squid Fish

இந்த 8 கைகளை வைத்துதான், உணவுத்தேவைவையை இந்த மீன்கள் பூர்த்தி செய்து கொள்கின்றன.. மீன்குஞ்சுகள், இறால்களைதான் இந்த மீன் உணவாக சாப்பிடுமாம்.. 8 கைகளின் உட்புறங்களிலும் உறிஞ்சு கிண்ணங்கள் போல இருக்கும். இந்த கிண்ணங்களை வைத்துதான், இரையை லபக்கென பிடித்து சாப்பிடும்.

கருப்பு கலர் திரவம்: இதனுடைய தலைக்குள் ஒரு சுரப்பி இருக்கிறதாம்.. எதிரிகள் தன்னை நோக்கி வந்தால், உடனே அந்த சுரப்பியிலிருந்து கருப்பு கலரில் ஒரு திரவத்தை திடீரென வெளியேற்றிவிடும். இதனால், சுற்றியுள்ள பகுதிகள் மொத்தமும் கருப்பாக மாறிவிடும். அதற்கு பிறகு ஓடிப்போய் பாறைகளுக்குள் ஒளிந்து கொள்ளும்.. அதேபோல, எதிரிகளிடமிருந்து தப்பிக்க, உடலின் தோல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளும்.

இதன் சதைகளும் பார்ப்பதற்கு மிக லேசாக இருக்கும்.. மீனவர்கள் வலையை போட்டு பிடித்தாலே, இந்த சதைகள் சிதைந்துவிடுமாம். அதனால்தான், எப்போதுமே, தூண்டிலை போட்டு, மீனவர்கள் இந்த கணவாயை பிடிப்பார்களாம். வெளிமாநிலங்களிலும் இந்த மீனுக்கு நல்ல கிராக்கி உள்ளது..

பாஸ்பரஸ்: இந்த கணவாய் மீனில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுல்லாமல், செலினியம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இந்த மீனில் நிறைந்துள்ளது.. அதாவது, 100 கிராம் கணவாய் மீனில் கிட்டத்தட்ட 44.8 µg செலினியம் இருக்கிறதாம்.. இந்த செலினியம் என்பது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது என்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த இந்த மீன் தேவையானதாக இருக்கிறது.

கனவாய் மீனை சாப்பிடுவதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப்படுகிறது.. அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம். இதனால், அனிமிக் தொந்தரவு நீங்கி, ரத்த சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் அதிகரிக்கக்கூடும்.. அத்துடன், மூளைக்கு தேவையான ஆக்சிஜனையும் இந்த மீன் வழங்குகிறது.. இதனால், மூளை வளர்ச்சியும் அதிகமாகிறது.

Do you Know what are the Health Benefits in Kanavai Meen and Amazing Medicine in the Squid Fish

கொழுப்பு மீன்கள்: கணவாய் மீன் என்றாலே கொழுப்பு மீன் என்பார்கள்.. இதிலுள்ள நல்ல கொழுப்புகள், இதய ஆபத்தை தடுப்பதுடன், தமனிகளில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது..

இதனால், உடல் எடையும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டுவிடும். நிறைய புரோட்டீனும் இதிலுள்ளதால், உடல் எடை அதிகரிக்காது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அபாயத்தை இந்த மீன் குறைக்கிறது.. இதனால், இன்சுலின் குறைபாட்டையும் சமன்படுத்துகிறது..

சில மீன்களில் நிறைய பாதரசம் கலந்திருக்கும்.. அதனால், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், இதய நோயாளிகள் இதுபோன்ற மீன்களை சாப்பிடவே முடியாது. ஆனால் கணவாய் மீனில் அப்படி இல்லை. பாதரசம் மிக மிக குறைவாகவே உள்ளதால் வழக்கமாக சாப்பிடக்கூடிய மீனாகவே இது கருதப்படுகிறது.

ஆண்மை குறைபாடுகள்: ஆண்மை குறைபாடுகளை தடுப்பதில் இந்த மீன் பெரும்பங்கு வகிக்கிறது.. விந்துக்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. அதேபோல தைராய்டு பிரச்சனையையும் தடுக்கிறது. வாரம் ஒருமுறை இந்த மீனை சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் தடுக்கப்படுவதுடன், தலைமுடி வளர்ச்சிக்கும் இந்த மீன் உறுதுணையாக திகழ்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+