"நெத்திலி மீன்" செய்றீங்களா? மீனிலேயே பெஸ்ட் இதானாமே.. காரணமே வேற.. ஸ்லிம் உடலுக்கு உதவும் நெத்திலி
சென்னை: மீன்கள் என்றாலே நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் மூலக்கூறுகள் அதிகம் உள்ள மீன்களில் நெத்திலி மீன்களும் ஒன்று.
மற்ற எல்லா மீன்களையும்விட, இந்த நெத்திலி மீனின் உடல் மிக மெல்லியதாக காணப்படும்.. இந்த மீனின் மேல் பகுதியில் பச்சைக்கோடும், கீழ்பகுதியில் ரத்த சிவப்புக்கோடும் இருக்கும். நெத்திலி மீன்கள் மருத்துவக் குணங்கள் அதிகமுள்ளவை.

நெத்திலி மீன்கள்: பெரிய மீன்களை காட்டிலும், நெத்திலி போன்ற சிறிய மீன்கள் இதயத்துக்கு நல்லது என்பார்கள்.. அத்துடன், தைராய்டு சுரப்பி, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு என பல்வேறு வகைகளில் இந்த நெத்திலி பயன்படுகிறது.. காரணம், செலினியம் இந்த மீனில் அதிகம் நிறைந்துள்ளது.
கேரளாவில் நெத்திலி மீன் மிகவும் பிரபலமானது... மிகவும் குளிராக இருக்கும் நீர்ப்பகுதிகளில் இந்த மீன் இருப்பதில்லை.. நெத்திலி எண்ணெய் நிறைந்த மீன் வகையாக இருப்பதால் இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.. இதயத்திற்கு ஆரோக்கியமானது..
கொழுப்பு அளவு: ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுவது.. புரதம் அதிகம் இருப்பதால் சத்தான உணவாக கருதப்படுகிறது. கலோரிகளும் குறைவு, புரோட்டீன்களும் அதிகம் என்பதால், உடல் எடையை குறைக்க நெத்திலி மீன்கள் உதவுகின்றன.
உடல் எடை குறைய : ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நெத்திலியை பொரித்து சாப்பிடக்கூடாது. ஊட்டச்சத்து நிறைந்த இந்த மீனை குழம்பு வைத்து சாப்பிட்டால், முழு சத்தும் கிடைக்கும்.. உடலில் இருக்கும் தேவையில்லாத கெட்ட கொழுப்புகளும் குறைந்துவிடும்..
அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.. கண் பார்வை கூர்மையாகும்.. கால்சியம் அதிக அளவில் இருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு உறுதுணையாகின்றன. செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது..
மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்க, பெண்களுக்கு நெத்திலி மீனை சமைத்து தருவார்கள்.. தாய்மார்களுக்கு கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் ஊறவும் பாரம்பரியமாக சமைத்து தருவார்கள்.. அதனால்தான், எப்போதுமே இந்த மீனுக்கு கிராக்கி அதிகம்.
இரும்பு சத்துக்கள்: நம்முடைய நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை கொண்டு செல்ல இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்பு சத்தும், கால்சியம் சத்தும் நிறைந்த மீன்தான் இந்த நெத்திலி.. இதனால் எலும்புகளும், பற்களும் உறுதியாகின்றன..
இந்த மீனிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடலில் ஏற்படும் வீக்கங்களை தடுத்து நிறுத்த உதவுகிறது.. எனினும் இந்த மீனில், சோடியம் அதிக அளவில் உள்ளதால், உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயமும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
சருமம் பளபளப்பு: ஃபேட்டி அமிலம், வைட்டமின் E, செலினியம் போன்ற சருமத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே இதில் நிறைந்துள்ளன.. அதனால், சரும பிரச்சனை இருப்பவர்கள், உணவில் நிறைய நெத்திலி மீனை சேர்த்து கொள்ளலாம்.. அதேபோல, கண்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், நெத்திலி மீனை வாரம் 2 முறையாக சாப்பிட்டு வர வேண்டும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications