பாறை மீனை வாங்குங்க.. பலனை அள்ளுங்க.. பாறை மீனின் கால்சியம்.. "அந்த" குறையை தீர்த்துவிடும் பாறை மீன்
சென்னை: பாறை மீன்களின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? இந்த மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
பாறை மீன்கள் பொதுவாக, பாறைகளிலேயே மறைந்து கொள்ளுமாம்.. சிலர் இதனை பரவா மீன் என்பார்கள்.. பாறை மீன் பார்ப்பதற்கு வெள்ளி நிறத்திலும், துடுப்புகள் மஞ்சள் நிறத்திலும் செவுள் பகுதிகள், கரும்புள்ளிகளுடன் காணப்படும். அதனால்தான், இதை சிலர் பட்டர் ஃபிஷ் என்பார்கள்.. சிலர் ஒயிட் ஃபிஷ் என்பார்கள். முள் சிறிய அளவுதான் இருக்கும்.

தன்மைகள்: பாறை என்பது பொதுவான பெயராகும். ஆனால், இந்த பாறையிலேயே நிறைய வகைகள் உள்ளன.. தேங்காய் பாறை மீன், மஞ்ச பாறை மீன், கடல் பாறை மீன், தோள் பாறை மீன், முட்டா பாறை மீன், நெய் பாறை மீன் இப்படி நிறைய வகைகள் உள்ளன..
சில மீன்களை குழம்பு வைத்தால்தான் நல்லாயிருக்கும்.. சில மீன்களை வறுத்தால்தான் நல்லாயிருக்கும். ஆனால், இந்த பாறையை மட்டும் குழம்பு, வறுவல் என இரண்டுமே செய்யலாம், அதனால்தான், தென்மாநிலங்களில் பாறை மீனுக்கென்று ஸ்பெஷல் இடம் உண்டு. இதன் விலையும் மிகவும் குறைவு.. தட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய மீனில் இதுவும் ஒன்றாகும்.
பாறை மீன் நன்மைகள்: இதிலுள்ள நன்மைகளை பார்த்தால், நிறைய புரோட்டீன்கள் இந்த பாறை மீனில் உள்ளன.. அதனால், உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பாறை மீனை சமையலில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.. அத்துடன், கலோரிகளும் இதில் குறைவாக உள்ளன.
இந்த பாறை மீன்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயாராகின்றன.. வைட்டமின் A, D, B 12 இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. அதாவது, 100 கிராம் பாறை மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9, நீர்ச் சத்து 66.70 கிராமும் இருக்கிறதாம்.. வைட்டமின் A உள்ளதால், கண்களுக்கு மிகவும் நல்லது. வாரம் 2 நாள் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளே வராதாம்.
புற்றுநோய்கள்: பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் இந்த வகை குறைக்கிறது. தோல் மற்றும் தலை முடி ஆரோக்கியத்தை பேணுவதில் பாறை மீனுக்கு பெரும்பங்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைவதால், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும். அத்துடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு தடுத்து நிறுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த மீனை தாராளமாக சாப்பிடலாம்,
குழந்தைகளின் ஆஸ்துமாவை தடுக்க பாறை மீன் சிறந்தது.. பாறை மீனில் அயோடின் சத்து உள்ளதால், முன்கழுத்துக்கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது..












Click it and Unblock the Notifications