மீன் சமைத்தால் "இதை" மறக்காதீங்க.. உடல் எடை குறைய உதவும் மீன்கள் இதுதான்.. நோட் பண்ணுங்க
சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நல்லதுதான்.. அதிலும் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள் அதைவிட நல்லது.. அப்படிப்பட்ட மீன்களில் பல நன்மைகள் இருக்கின்றன என்றாலும், உடல் எடையை குறைப்பதில் சில மீன்களுக்கு நிறையவே பங்குள்ளது. அந்த மீன்கள் என்னென்ன?
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து மீன்களிலுமே உள்ளன..

மனித ஆயுள்: சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது... மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது.. மனித ஆயுளையும் கூட்டுகிறது.
கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள் தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது... நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒமேகா கொழுப்பு: புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது... அத்துடன், இதயத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
ஷீலா / சீலா: அப்படி உடல் எடையை குறைக்கக்கூடிய மீன்களில் ஒன்று ஷீலா மீன். இதை ஷீலா மீன் அல்லது சீலா மீன் என்பார்கள்.. ஊளி மீன் என்றும் இதை சொல்வார்கள்.. மாவுலா மீன் என்றும் சொல்வார்கள்.. இந்த ஷீலா மீனிலேயே 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாம்.. மிக மிக குறைந்த கலோரிகளும், அளவுக்கு அதிகமான புரதமும் கொண்டதுதான் இந்த ஷீலா மீன்.. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த மீன் பெஸ்ட் சாய்ஸ்..
சருமத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த மீன் மிகவும் நல்லது.. வெறும் ஷீலா மீனை வேக வைத்து உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் இன்னும் பலன் கிடைக்கும் அல்லது சுட்டு சாப்பிடலாம்..
கணவாய் மீன்: கணவாய் மீன் என்றாலே கொழுப்பு மீன் என்பார்கள்.. இதிலுள்ள நல்ல கொழுப்புகள், இதய ஆபத்தை தடுப்பதுடன், தமனிகளில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.. இதனால், உடல் எடையும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டுவிடும். நிறைய புரோட்டீனும் இதிலுள்ளதால், உடல் எடை அதிகரிக்காது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அபாயத்தை இந்த மீன் குறைக்கிறது.. இதனால், இன்சுலின் குறைபாட்டையும் சமன்படுத்துகிறது
சங்கரா மீன்: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாளாவது சங்கரா மீனை பயன்படுத்தலாம். காரணம், குறைந்த அளவிலான கலோரி அதிக புரதம் கொண்டவை... ஆனால், உடல் எடை குறைய, சங்கரா மீனில் குழம்பு, வறுவல் செய்வதைவிட, கிரில் செய்து சாப்பிட்டால் இன்னும் சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள்..
அல்லது இந்த சங்கரா மீனின் தலையை மட்டுமே வைத்து, சிலர் சூப், ரசம் போல செய்வார்கள். சின்னவெங்காயம், இஞ்சி பூண்டு, தக்காளி, மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து சூப் போல, ரசம் போல செய்து சாப்பிடுவார்கள். எந்த மீனிலுமே, மீனின் சதைப்பகுதியைவிட, மீனின் தலைப்பகுதிதான் அதிக ருசி என்பதை மறந்து விடக்கூடாது.
பாறை மீன்: நிறைய புரோட்டீன்கள் இந்த பாறை மீனில் உள்ளன.. அதனால், உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பாறை மீனை சமையலில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.. அத்துடன், கலோரிகளும் இதில் குறைவாக உள்ளன. இந்த பாறை மீன்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயாராகின்றன.. வைட்டமின் A, D, B 12 இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. வாரம் 2 நாள் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளே வராதாம்.
நெத்திலி: அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், புரோட்டீன்கள் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு வழி வகுக்கும்... நம்முடைய கண் பார்வையை கூர்மையாக்கும்.. மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்க, பெண்களுக்கு நெத்திலி மீனை சமைத்து தருவார்கள்..
முரல் மீன்கள்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த முரல் மீனை தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள். இதயத்துக்கும் நல்லது.. நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட்டு வருவதால், பாதிப்புகள் குறைகின்றன.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகின்றன.
ஆனால், எந்த மீன்களாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக மசாலா சேர்க்காமல், அதிகமாக எண்ணெய்யும் சேர்க்காமல் மீன்களை வேகவைத்து உப்பு மிளகாய் சேர்த்து அவித்தோ அல்லது நெருப்பில் சுட்டோ சாப்பிட வேண்டுமாம். அப்போதுதான் முழு சத்தும் வீணாகாமல் கிடைக்குமாம்.. குறைந்தபட்சம் எண்ணெய் குறைவாகவிட்டு, குழம்பாக செய்து சாப்பிட சொல்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications