நெஞ்சில் வலி வந்தா கூட பரவாயில்லை.. ஆனா சத்தமே இல்லாத சைலண்ட் ஹார்ட் அட்டாக் ரொம்ப டேன்ஜர் ஏன்?

அமைதியான மாரடைப்பு (silent heart attack) ஏற்படுவது எதனால், அதன் அறிகுறிகள் யாவை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைதியான மாரடைப்பு (silent heart attack) என்றால் என்ன, அதன் அறிகுறிகள் யாவை, வலியில்லாமல் வரும் மாரடைப்புகள் ஏன் ஆபத்தானவை தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் 17 வயது சிறுவன். இவர் மகாகாலேஸ்வரர் கோயில் அர்ச்சகரின் மகனாவார். அங்கு ரங் பஞ்சமி ஊர்வலத்தின் போது அர்ச்சகரின் மகன் வாள் சுழற்றி கோயில் வளாகத்தை வலம் வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்கிறார்கள். இதனால் அதிர்ந்த பெற்றோர் மருத்துவரிடம் சிறுவன் மார்பு பகுதி வலிப்பதாக எங்களிடம் சொல்லவில்லை என்கிறார்கள். அதற்கு மருத்துவர்கள் சைலண்ட் ஹார்ட் அட்டாக்கால் உங்கள் மகன் இறந்ததாக கூறுகிறார்கள்.

சைலண்ட் மாரடைப்பு

சைலண்ட் மாரடைப்பு

சைலண்ட் மாரடைப்பு என்றால் என்ன? அறிகுறிகளே இல்லாமல் அமைதியாக வந்து ஆளை கொல்லும் மாரடைப்புதான் சைலண்ட் மாரடைப்பு ஆகும். இது சாதாரணமாக வரும் மாரடைப்பை காட்டிலும் மிகவும் மோசமானவை. சாதாரண மாரடைப்பில் நோயாளிக்கு இடது தோள் பட்டையில் வலி, நெஞ்சில் வலி, வியர்த்தல் இருக்கும். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம்.

அமைதியான மாரடைப்பு

அமைதியான மாரடைப்பு

ஆனால் இந்த அமைதியான மாரடைப்பு நோயாளிக்கு எந்த ஒரு அறிகுறியையும் கொடுக்காது. 45 சதவீதம் பேர் இந்த அமைதியான மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களை காட்டிலும் ஆண்களுக்குத்தான் அதிகமாக வருகிறது. இந்த மாரடைப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும். இதனால் இது ஏன் என நோயாளி கண்டுபிடிக்கவே குழப்பங்கள் ஏற்படும். இதனால் மருத்துவ உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சாதாரண மாரடைப்பின் அறிகுறி

சாதாரண மாரடைப்பின் அறிகுறி

சாதாரணமாக மாரடைப்பின் அறிகுறிகள் - மார்பு பகுதி அழுத்தமாக இருப்பது, நெஞ்சு வலி, மார்பில் யாரோ உட்கார்ந்து அழுத்துவது போல் இருப்பது, தோள்பட்டை, கழுத்து, தசை பகுதிகளில் ஊசி குத்துவது போல் வலி, மூச்சுவிட சிரமப்படுதல் ஆகியவை ஆகும். இதை வைத்து நோயாளியை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம். ஆனால் இவை எல்லாம் சைலண்ட் மாரடைப்பில் இருக்காது.

ஆய்வு சொல்வது என்ன

ஆய்வு சொல்வது என்ன

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கையில் 45 முதல் 84 வயதுக்குள்பட்ட 2000 பேருக்கு இதய நோய் இல்லை. ஆனால் 10- ஆண்டுகள் கழித்து அவர்களுள் 80 சதவீதம் பேருக்கு சைலண்ட் ஹார்ட்அட்டாக் ஏற்பட்டிருந்தது நிரூபணமானது. அந்த 80 சதவீதம் பேருக்கு நோய் குறித்த எந்த அறிகுறியும் இலலாமல் இருந்தது. இந்த மையோ கார்டியல் எனப்படும் சைலண்ட் மாரடைப்பு என்பது பெண்களை காட்டிலும் 5 மடங்கு ஆண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது என அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல், உடல் பருமன், உடல் உழைப்பின்மை, அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோருக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியங்களை போல் சைலண்ட் ஹார்ட் அட்டாக வரவும் வாய்ப்புகள் உள்ளன. நீண்டகாலமாக உறுப்புகளை பாதித்துவரை இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக் குறித்து எந்த வித அறிகுறியும் தெரியாது. எனவே மேற்கண்ட நோய்கள் இருப்போர் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும். உட்கார்ந்தபடியே வேலை பார்ப்போர், உடற்பயிற்சிகளை செய்து தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+