"நுரையீரல்" கிளீன் ஆகணுமா.. நுரையீரல் சுத்திகரிப்புக்கான டாப் உணவுகளே இதுதான்.. நோட் பண்ணிக்குங்க
சென்னை: நுரையீரல் ஆரோக்கியத்துக்கான அக்கறையை பலரும் காட்டுவதில்லை என்கிறார்கள்.. நுரையீரல் பாதுகாக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும்.. ஆனால், வைரஸ், பாக்டீரியா தொற்றுக்களாலும், இந்த உறுப்பு பாதிக்கப்பட்டுவிட்டால், மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேர்ந்துவிடும்.

என்னென்ன பாதிப்புகள்: சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்று நோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், தொழில்சார்ந்த நுரையீரல் தொற்று நோய்கள் போன்றவைகளால்தான், நுரையீரலுக்கு ஆபத்து நேரிடுகிறது. நீரழிவு, இருதயநோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் இதெல்லாம் சேர்ந்தும்கூட நுரையீரலுக்கு பாதிப்பை தந்துவிடும்.
நுரையீரல் தொற்றுக்களை தடுப்பதற்காகவே அதாவது, நிமோனியா, இன்ஃபுளுயென்சாவை தடுப்பதற்காக இருக்கின்றன... எனினும், சிகரெட் புகைப்பவர்களுக்கும், அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் பேராபத்தாக அமைந்து விடுகிறது..
அறிகுறிகள்: அடிக்கடி இருமல் வந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது.. நாள்பட்ட சளித்தொல்லையாக இருந்தாலும், உடனடியாக கவனிக்க வேண்டும்.. இதன்காரணமாக மூச்சு திணறலுடன் நெஞ்சுவலியும் ஏற்படும்.. பிறகு இருமலுடன் ரத்தம் வந்துவிடும். அதனால், 15 நாட்களுக்கு மேல், இருமல் இருந்தாலே உஷாராக வேண்டுமாம்.. எலும்புகளில் வலி, திடீரென குரலில் மாற்றம், தோள் பட்டையில் வலிகள் வந்தால், காசநோய், ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றே அர்த்தம்.
இதற்கெல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என்றிருக்காமல், உடனடியாக டாக்டர் சந்திக்க வேண்டும் என்கிறார்கள்.. நுரையீரல் தொற்றுக்கள் ஏற்படாதவாறு, நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.. அதேபோல, நுரையீரலை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உணவுமுறைகள் மிகவும் அவசியமாகும்.
என்னென்ன உணவுகள்: ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப்பழங்களையும், காய்கறிகளையும் நிறைய சாப்பிட வேண்டுமாம்.. குறிப்பாக, கொய்யா, கிவி, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை, பைன் ஆப்பிள் சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.. இதில் பிரதானமானதும் முதன்மையானதும் கேரட் ஆகும். பீட்டாகரோட்டினும், வைட்டமின் A சத்தும் உள்ளதால், கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம்.

அதேபோல, ஒமேகா 3 சத்துக்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.. மீன்கள், பாதாம், வெள்ளரி விதைகளை போன்றவற்றில் ஒமேகா 3 சத்து உள்ளதால், தினமும் இவைகளில் ஏதாவது ஒன்று உணவில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்..
இஞ்சி - பூண்டு: சமையலில், நிறைய இஞ்சி - பூண்டு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், நுரையீரல் புற்றுநோயை அண்டவிடாமல் தடுக்க செய்யலாம். காரணம் இவை இரண்டுமே, ஜீரண சக்தியை தரக்கூடியது. நச்சுக்களை அழிக்கக்கூடியது.. சுவாசப் பாதையை சீராக்கக்கூடியது..
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications