குண்டு குண்டுன்னு இருக்கிறீங்களா? இதோ "5 மேட்டரை" ட்ரை பண்ணுங்க.. மின்னலென எடை குறைஞ்சிடும் பாருங்க
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தவிர்க்கவே முடியாத விஷயம் உடற்பயிற்சிகள்தான்.. கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றாலும், உடல்எடை குறைய பக்கபலமாக இருப்பது காய்கறிகளும், பழங்களும்தான்.
இதில், காய்கறிகளை பொறுத்தவரை, நீலம் மற்றும் ஊதா நிற காய்கள், உடல்எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்கிறார்கள்..

குறிப்பாக, திராட்சை, நாவல்பழம், பிளம்ஸ்பழம், கத்தரிக்காய் இதெல்லாம் சத்துக்கள் நிறைந்தவை.. வைட்டமின் சி, நார்ச்சத்து இதில் உள்ளன.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. செரிமானத்துக்கு பேருதவி புரிகிறது..
காய்கறிகள்: இந்த இரண்டு கலர்களில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன.. ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் இவை பயன்படுகிறது. இனிமேல், உடல் உடையை குறைக்க நினைப்பவர்கள், ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ், கத்தரிக்காயை உங்கள் டயட் சார்ட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் எடை குறைக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும், அந்த தண்ணீரையும், சத்தான தண்ணீராக குடித்தால் இன்னும் உபயோகமாக இருக்கும். குறிப்பாக, இஞ்சி மற்றும் எலுமிச்சம் சாறு கலந்த தண்ணீர் குடிக்கலாம். அல்லது, பட்டையை தூள் செய்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
வெந்தயப்பொடி: அல்லது வெந்தயப் பொடியை எடுத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடலாம்.. அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது திரிபலா பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, இரவு உணவுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது சுக்குப்பொடியை சூடான நீரில் கலந்து குடிக்கலாம்.
வெறும் தண்ணீருக்கு பதிலாக இப்படியெல்லாம் மாற்றி எடுத்து கொள்ளும்போது, ஜீரண சக்தி அதிகரிக்கிறது.. உடல் கழிவுகள் நீங்குகிறது. அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.. புத்துணர்ச்சி கிடைக்கிறது.
அதாவது, காலை உணவில் 230 கலோரியும், மதிய உணவில் 500 கலோரியும் இரக்க வேண்டும். அதேபோல் மாலையில் 70 கலோரியும், இரவில் 350 கலோரி உணவும் இருக்க வேண்டும். . மாலையில் 70 கலோரி தேவை என்பதால், இந்த நேரத்தில், பெரும்பாலும் பாப்கார்ன் சாப்பிடலாம். காரணம் அதில் நிறைய கலோரிகள் கிடையாது.
இஞ்சி ஜூஸ்: 2 விதமான ஜூஸ்களை தினமும் குடிப்பதால், உடல் எடை வெகுவாக குறையும்.. அதில் ஒன்று இஞ்சி ஜூஸ்.. இதை நாமே தயார் செய்யலாம். ஒரு கண்ணாடி பாட்டிலில், இந்த துருவிய இஞ்சி, சீரகப்பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.. இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்தால், அதுவே இஞ்சி ஜூஸ்.. உணவு எடுத்துக் கொள்வதற்கு, அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதை குடிக்க வேண்டும்.

மற்றொன்று சுரைக்காய்.. சிறிது புதினா இலைகளுடன் சுரைக்காய், சிறிது இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் என அனைத்தையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இறுதியில், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கல்உப்பு சேர்த்து, வடிகட்டி குடித்தால் அவ்வளவும் பலன் கிடைக்கும்.. காரணம், 92% சதவீதம் நீர் + தாதுக்கள் இதில், உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த சுரைக்காய் மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
குடம்புளி: அதேபோல, குடம்புளி நீரையும் பயன்படுத்தலாம்.. அதாவது ஒரு டம்ளர் நீரில், எலுமிச்சை அளவு குடம்புளியை ஊறவிட்டு, அதனுடன் 3 டம்ளர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. இந்த நீரை ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் குடித்து வந்தால், பலன் கிடைக்கும். வீட்டிலுள்ள பொருட்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் பயன்படுத்தினாலே, உடல் எடையை குறைப்பதில் பாதி சிரமம் நீங்கிவிடும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications