கழிப்பறையில் கூட செல்போனுடன் "இருக்கிறீர்களா".. அப்ப இந்த நோய்கள் எல்லாம் தாக்கும் அபாயம் இருக்கு!
சென்னை: டாய்லெட்டில் செல்போனை பயன்படுத்துகிறீர்களா? இதனால்தான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
நாம் சிறிய வயதில் அறிவியல், சமூக அறிவியலில் fundamental needs என்னென்ன என படித்திருக்கிறோம். அதில் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகிய மூன்றுதான் இன்றியமையாத தேவைகளாகும்.

ஆனால் இன்று உண்ண உணவு இல்லாவிட்டாலும் இருப்பார்கள். செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்த செலவு செல்போன்கள் நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டன. ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பட்டன் போன்கள், தொலைபேசிகள் எல்லாம் பேசுவதற்கும் ஒருவருக்கு முக்கிய தகவலை சொல்லவும்தான் பயன்பட்டன.
ஆனால் ஸ்மார்ட் ஆன்ட்ராய்டு போன்கள் தற்போது பேசுவதற்கு மட்டும் இல்லாமல் நம் பொழுதுபோக்கிற்கும் உகந்ததாக மாறிவிட்டது. செல் இல்லாமல் சொல் இல்லை என்ற அளவுக்கு உள்ளது. சிறிய குழந்தை கூட ஆன்ட்ராய்டு போன்களை ஆபரேட் செய்வதும் தவறான பழக்கம் என்ற போதும் நாம் பெருமை பீற்றுவதும் உள்ளது.
இந்த போனை ஆபரேட் செய்ய கற்றுக் கொள்ளும் குழந்தையின் புத்தி கூர்மையை வேறு விதத்தில் பயன்படுத்த யாரும் முயற்சிப்பதில்லை. இந்த செல்போன் மூலம் மெயில் அனுப்புவது, வாட்ஸ் ஆப் மூலம் ஆவணங்களை அனுப்புவது, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கட்டத்தில் செல்போன் இருக்கிறது.
போற இடங்களுக்கு எல்லாம் செல்போன் எடுத்து செல்கிறோம். டிவி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டால் அப்படியே ஒரு கை உடைந்துவிட்டது போல் தவிப்பார்கள். இரவு சீக்கிரம் உறங்கும் பழக்கத்தையும் இந்த செல்போன்கள் கபளீகரம் செய்துவிட்டன. அது போல் காலையிலும் ஊருக்கெல்லாம் குட் மார்னிங் மெசேஜ் போட்டு செல்போனில்தான் விழிப்பார்கள்.
கிச்சன், படுக்கை அறை, மொட்டை மாடி, பால்கனி என எங்கும் எடுத்துச் செல்கிறார்கள் என்றால் கழிப்பறைக்கு கூடவா செல்போனை எடுத்துச் செல்வார்கள்? அந்த பாத்ரூமில் செல்போன், ஹெட் போன் எடுத்துக் கொண்டு அரை மணி நேரமானாலும் வருவதே இல்லை. முதல் முறையாக பாத்ரூமிற்கு செல்போனுடன் சிலர் செல்வது தெரியாமல் அவர்கள் வெகு நேரமாக வெளியே வராததால் அச்சமடைந்து கதவை தட்டிக் கொண்டிருப்போம்.
அந்த சப்தம் கூட கேட்காமல் பொறுமையாக "இருந்துவிட்டு" பின்னர் கேசுவலாக கதவை திறப்பார்கள். கழிப்பறையில் அமரும் நேரத்தை கூட வீணடிக்க மாட்டார்களாம். வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தினால் நம் கவனம் எப்படி சிதறுகிறோ அதே போல் டாய்லெட்டுக்குள் போனை எடுத்துச் சென்றால் நிறைய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை கழுவுவதே கிடையாது. சில நேரங்களில் அசுத்தமான இடங்களில் செல்போனை வைத்திருப்போம். இதனால் பாக்டீரியா, வைரஸ் கிருமி தொற்றுகள் நம் கைகளில் இருந்து செல்போனிலு் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் வயிற்று போக்கு ஏற்படுவது, சருமத்தை பாதிக்கும் ஸ்டாபிலோகோசஸ், காசநோயை உண்டாக்கும் ஆக்டினோபாக்டீரியா, வலியுடன் கூடிய சிறுநீர் தொற்றை உண்டாக்கும் சிட்ரோபேக்டர் போன்ற நோய்க் கிருமிகள் பரவுகின்றன.
போனில் உள்ள பிளாஸ்டிக் மீது இருக்கும் சில வகை வைரஸ்கள் ஒரு வாரம் வரை அதே இடத்தில் உயிர் வாழும் என்கிறார்கள். எனவே செல்போனை எடுத்துக் கொண்டு கழிப்பறைக்கு செல்லக் கூடாது. அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திவிட்டுதான பயன்படுத்த வேண்டும். உண்ணும் போதும் மலம் கழிக்கும் போதும் செல்போன், டிவி உள்ளிட்டவை கூடவே கூடாது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications