மீனை வாங்கினால் இதை மிஸ் பண்ணாமல் கவனியுங்க..சால்மன், மத்தி, வஞ்சிரம், சங்கரா.. மீன்களின் சத்துக்கள்
சென்னை: மீன்களை வாங்கும்போது சில விஷயங்களை உற்று கவனிக்க வேண்டும். அதேபோல, எந்தெந்த மீன்களில் எந்தெந்த சத்துக்கள் நிறைந்துள்ளன தெரியுமா?
எப்போதும் மீன்களை வாங்கும்போது, பார்த்தவுடனேயே பளபளப்பாகவும், செதில்களில் சேதம் அடையாமல் உயிருள்ள மீனுக்கு இருப்பதுபோலவே இருக்க வேண்டும்..

வெள்ளரி வாசம்: புதிய மீன்களில் மீன் வாடை அடிக்காதாம்.. சுத்தமான தண்ணீரின் வாசம் அல்லது வெள்ளரியின் வாசம் மட்டுமே இருக்கும். மீனை தொட்டு அழுத்தினால் குழிவிழக்கூடாது. சதைப்பகுதி கெட்டியாக இருக்க வேண்டும்.. பொல பொலவென அமுங்க கூடாது.. விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் மீன்களின் மீது, நிறைய ஈக்கள் மொய்த்தாலே அது நல்ல மீன்கள் என்று எடுத்து கொள்ளலாம். மீன்கள் மீது மருந்து தெளித்து வைத்திருந்தால், மருந்து வாசனைக்கு ஈக்கள் மொய்க்காது..
மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவரக்கூடாது.. கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும்.. வெள்ளை கலரில் கண்கள் இருந்தால் வாங்கக் கூடாது.. மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் இளஞ்சிவப்பு நிறமாக இருக்க வேண்டுமே தவிர வெள்ளை கலராக செவுள்கள் இருக்கக்கூடாது. மீனின் தலைப்பகுதியை கைகளால் தூக்கி பார்த்தால், வால் பகுதியும், கழுத்து பகுதியும் விறைப்பாக இருக்க வேண்டும்.
தொந்தரவுகள்: ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்... புற்றுநோய் வருவதற்கான அபாயமும் அதிகம். புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது அதிகபட்சம் 2 நாள்கள் வரை ஐஸில் வைத்த மீன்களை சாப்பிட்டால் மட்டுமே போதும்.
ஒவ்வொரு மீனிலும் ஒவ்வொரு மருத்துவ நன்மைகள் உள்ளன.. எனினும், ஒமேகா 3 அமிலங்கள் பொதுவாக நிறைந்திருக்கின்றன.. அதனால்தான், உடலுக்கு பல வழிகளில் நன்மை தரும் இந்த கடல் உணவுகளை தவறாமல் சாப்பிட சொல்கிறார்கள் மருத்துவர்கள்..
இரும்புச்சத்து: உதாரணத்துக்கு, 100 கிராம் சங்கரா மீனில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், செலினியம், ஒமேகா 3 அமிலங்கள், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம், பாஸ்பரஸ், சத்துக்கள் அடங்கி இருக்கிறது. எனவே சங்கரா மீனை சாப்பிடும்போது, நம்முடைய நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது.
இதில் பொட்டாசியம் உள்ளதால், உடல் எடையும் நமக்கு வெகுவாக குறைக்க உதவுகிறது. எனவே உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்குமாம். இதயம் ஆரோக்கியம் பெறுகிறது.. ரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது. வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.
சால்மன் மீன்கள்: மத்தி மீன்கள், DHA நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது.. வஞ்சிரம் மீனில் புரோட்டீன், வைட்டமின் D, E, A, B6 உள்ளதால் நிறைவாக உள்ளது.. இவைகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.. அயலா மீனில் ஒமேகா 3 வைட்டமின், D செலினியம் உள்ளதால் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.. சால்மன் மீனில் அமினோ ஆசிட், ஒமேகா 3, ஒமேகா 6 நிறைந்திருக்கின்றன.. கட்லா மீனில் ஜிங்க், சல்பர் உள்ளதால், தோல் ஆரோக்கியத்துக்கு நல்லது
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications