மட்டன் எடுக்கறீங்களா? அப்ப இந்த ஐட்டமை மிஸ் பண்ணாதீங்க.. அனீமியாவை ஓட்டும் அற்புத ஆட்டுக்கறி எலும்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : மட்டன் எடுக்கும்போது, ஒரே மாதிரியாக வாங்காமல், மார்க்கண்டம், சுவரொட்டி, போன்றவற்றையும் சேர்த்து வாங்கி சமைத்தால், சத்துக்கள் எளிதாக கிடைக்கும். இதனால், ஹீமோகுளோபின் பிரச்சனையும் தீரும். அதற்கான குட்டி டிப்ஸ் இது.

நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள், எடை அதிகம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், ஆட்டுக்கறியை பற்றி நினைக்கவே கூடாது. அல்லது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் "குறைவான" அளவு எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம்.

mutton mutton rib bone

ஆரோக்கியம்: ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என உடலுழைப்பில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது மட்டனை சாப்பிடலாம் என்கிறார்கள். வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் நிறைந்த மட்டனை, சரியான முறையில் சமைப்பதால் ஆரோக்கியமும், சத்தும் கிடைக்கும்.

ஒரே மாதிரியாக ஆட்டுக்கறியாக இல்லாமல், ஆட்டு மண்ணீரலையும் சேர்த்து கொள்ளலாம். இதனை சுவரொட்டி என்பார்கள். இது பச்சையாக இருக்கும்போது சுவற்றில் ஒட்டிக்கொள்ளுமாம்.. அதனால்தான் இந்த பெயர் வந்துள்ளது. அமினோ அமிலங்கள், B12 மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. அதாவது, 50 கிராம் மண்ணீரலில் ஒரு நாளைக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளதால், ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள், மண்ணீரலை சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்..

ரத்த சோகை: மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு, முடக்குவாதம் உள்ளவர்களுக்கு, சிறுநீரக தொற்று உட்பட, சிறுநீரக பிரச்சனைகளை கொண்டவர்களும், சுவரொட்டி ஒரு பெஸ்ட் தீர்வு.

அதேபோல, ஆட்டுக்கறியைவிட அதிக சத்து, அதன் எலும்புகளில்தானாம்.. எனவே, மார்க்கண்டமும் சேர்த்து வாங்கலாம். ஆட்டின் விலா எலும்பு பகுதிக்குதான் மார்க்கண்டம் என்பார்கள். இதில், "கொலாஜன்" நிறைய உள்ளன.

குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் போன்றவை நிறைந்துள்ளதால், மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் பலம் கிடைக்கிறது. கொலாஜன் இந்த எலும்பு சூப்பில் நிரம்பி உள்ளதால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. சருமத்துக்கும் நல்லது. தலைமுடி, தோல், நகங்களுக்கும் நல்லது.

மட்டன் ரசம்: அல்லது மட்டன் எலும்புகளை சேர்த்து, மிளகுணசீரகம், பூரண்டு இவைகளை வைத்து ரசம் போல வைக்கலாம். அல்லது உப்புக்கண்டம் போடலாம். எண்ணெய் அதிகம் இல்லாமல் மட்டன் சமைத்தாலே, அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இதற்கு கிரில் செய்தோ, சூப் வடிவிலோ அல்லது நெருப்பில் வாட்டியோ, ரசம் வைத்தோ சாப்பிடலாம்.

அதேபோல, மட்டன் வாங்கும்போது, தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும் என்பார்கள்.. ஏனென்றால், இந்த தோல் பகுதிகளில் அதிக கலோரிகள் நிறைந்திருக்கும். இதுதான், இதய கோளாறுகளுக்கு ஆபத்தாக அமைந்துவிடுகிறது. எனவே, தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும். அதேபோல, கறியின் மேல், கொழுப்புசத்துக்களுடன் நிறைந்த வெள்ளை நிற கோடுகள் இருந்தால், அதை வாங்கலாம். இந்த கறிகள் நிறைய சுவையுடன் இருக்கும்,

குட்டி டிப்ஸ்: மட்டன் வாங்கி வந்ததுமே, குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் சமைத்து சாப்பிட வேண்டுமாம்.. அதாவது, ஆட்டினுடைய தலையை துண்டித்து, கொஞ்ச நேரம் மட்டும்தான், அதனுடைய உயிர் செல்கள் இருக்கும் என்பதால், அதிக நேரம் பதப்படுத்தி வைக்கக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+