கொத்து கொத்தாக கொத்தமல்லி.. கொழுப்பை கரைக்கும்.. ஈரலை பலப்படுத்தும்.. மல்லி விதை டீ தெரியுமா? பெஸ்ட்
சென்னை: கொத்தமல்லி இலைகள், கொத்தமல்லி விதைகளின் பயன்கள் என்னென்ன? உடல் எடை குறைவது முதல் நிம்மதியான தூக்கம்வரை பெரிதும் உதவக்கூடிய இலைகளின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?
வைட்டமின்கள் A, C, K, இரும்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் ஏகப்பட்டவை நிறைந்திருக்கின்றன.. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை தர க்கூடியது..

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமையான வரப்பிரசாதம் கொத்தமல்லி விதைகள்.. ஏனென்றால், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் சக்தி இந்த மல்லி விதைகளுக்கு இருக்கிறது. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி செய்கின்றன இந்த விதைகள்.
கண்பார்வை: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லியை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.. தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும்..கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஈரல் உறுதிப்படும். கண் பார்வை கூர்மையாகும்.
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேறும். அதாவது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி விதைகளை இரவெல்லாம் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில், அந்த இலையை மென்றுவிட்டு, தண்ணீரை குடித்துவிட்டால், அஜீரண கோளாறுகள் நீங்கிவிடும். கொத்தமல்லி விதைகளை, டீ போல தயாரித்து குடித்து வந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்..
வாயு தொந்தரவு: வெறுமனே கொத்தமல்லியை இலையை சுத்தமாக கழுவி இரவெல்லாம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரையும் குடிக்கலாம். தேவைப்பட்டால் எலுமிச்சம் சாறு சேர்த்து கொள்ளலாம். மல்லி விதைகள் குடல் இயக்கத்தை மேம்படுத்தக்கூடியது என்பதால், இதனால் வாயு தொந்தரவுகளும் நீங்கும்.
சருமத்தை பொலிவாக்கும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு.. கொத்தமல்லி இலையை உணவாக மட்டுமேயல்லாமல், இலைகளை அரைத்து முகத்தில் பூசி வந்தால், தோல் சுருக்கம் நீங்கும்.. கண் தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. கண்களை சுற்றியுள்ள கருமை, முகத்திலுள்ள தழும்புகள் மறையும்...
கருவளையம்: கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள், கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேல் பற்று போல போட்டு வந்தால், கருவளையங்கள் நீங்குவதுடன், கண்களுக்கும் புத்துணர்வு கிடைக்கும். அதேபோல, கொத்தமல்லி விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஆறவைத்து கண்களை கழுவினாலும், கண்களுக்கு பொலிவு கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தவறவிடக்கூடாத இலைகளில் கொத்தமல்லியும் ஒன்றாகும்.. நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்ட கொத்தமல்லி, இன்சுலின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
நொதி செயல்பாடுகள்: எனினும், ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள், நீரிழிவு மருந்துகளை உட்கொள்பவர்கள், இந்த கொத்தமல்லியை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. காரணம், ரத்தத்தில் இருந்து சர்க்கரையை நீக்க உதவும் நொதி செயல்பாடுகளை இந்த விதைகள் ஊக்குவிப்பதாக சொல்கிறார்கள். எனவே, 10 கிராம் அளவு மல்லி விதைகளை தண்ணீரில் இரவு ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கிறார்கள். எனவே, இதை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செய்வது நல்லது.
ரத்த சோகை நோயையும் தீர்த்து, ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதயத்துக்கு மிகவும் பாதுகாப்பான உணவாக இந்த மல்லி விதை உள்ளது.. எனவே, இந்த விதைகளை சிறிது வறுத்து பவுடராக்கி வைத்து கொண்டு, அவ்வப்போது டீ தயாரித்து குடிக்கலாம்.. இந்த டீயில் சுக்குப்பொடியும் சேர்த்து கொள்ளலாம்.
நாட்டுச்சர்க்கரை: அதாவது, 20 அல்லது 30 மல்லி விதைகளை இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த டீ குடிப்பதால், வயிறு உபாதைகள், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற தொந்தரவிலிருந்து விடுபடலாம்.. பித்தம் நீங்கும். ஹார்மோன் சமநிலையாகிறது.
தலைவலி, மூக்கடைப்பு, ஜலதோஷம் இருந்தாலும், கொத்தமல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.. மாதவிலக்கு: மாதவிலக்கு பிரச்சனை இருப்பவர்கள், கொத்தமல்லி இலையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
கெட்ட கொழுப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த விதையை பயன்படுத்தலாம்.. காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை.
எண்ணெய்: முகத்தில் எந்தவகையான தழும்புகள், பருக்கள் இருந்தாலும், அதை போக்கக்கூடியது இந்த மல்லி விதைகளின் எண்ணெய்.. கரப்பான், காளான்படை முதலான தோல் நோய்களுக்கும் மல்லி விதை எண்ணெய் தீர்வு தருகிறது. மாதவிடாய் தொந்தரவுக்கும் இந்த மல்லி விதை நீர் உதவுகிறது.. 1.2 கிராம் கொத்தமல்லி விதைகள் அல்லது அரை டீஸ்பூன் மல்லி பொடியை 150 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் கழித்து, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடித்தாலே போதும். மாதவிடாய் கால பிரச்சனைகள் தீரும்..
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications