பெண்களின் அருமருந்து அகத்திக்கீரை.. அத்தனையும் பெஸ்ட்.. அகத்திப்பூ தரும் நன்மையை பாருங்க.. விடாதீங்க
சென்னை: அகத்திக்கீரையை சத்துக்களின் சங்கமம் என்பார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியும்? தாய்மார்களுக்கு இந்த கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள என்ன காரணம் தெரியுமா? எந்த உணவுடன் அகத்திக்கீரையை தவிர்க்க வேண்டும்? அகத்திப்பூக்களின் நன்மைகள் யாவை?
அகத்திக்கீரையை பொறுத்தவரை உடலிலுள்ள உஷ்ணத்தை வெளியேற்றக்கூடியது.. அகம் + தீ + கீரை என்பதுதான் அகத்திக்கீரையாகும்.. அதனால், உடல் சூடு மட்டுமல்ல, கண் நோய், கண் எரிச்சல் பாதிப்பு உடையவர்கள், இந்த அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட வேண்டும்.

கண் பார்வை: இந்த கீரையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பாதிப்புகள் வருவதே கிடையாது.. கண்ணாடியும் அணிய தேவையும் எழுவதில்லை. குடல்புண், வாய்ப்புண்ணை போக்கும் ஆற்றல் இந்த கீரைக்கு இருக்கிறது..
கீரை என்றாலே இரும்புச்சத்து நிறைந்தவை.. முருங்கை கீரையை போலவே, இரும்புச்சத்து நிறைந்த கீரையாக அகத்திக்கீரை கருதப்படுகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு அகத்திக்கீரை தருவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட அளவு இதை உணவில் சேர்க்கும்போது தாய்ப்பால் பெருகுகிறது. இந்த கீரைக்கு பால் வளம் பெருக்கும் சக்தி உள்ளதால்தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கும் தீவனமாக தரப்படுகிறது.
குழந்தைகள்: ரத்த கொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள், அகத்திக்கீரையை தவறவிடக்கூடாது. நல்ல மூளை வளர்ச்சியை தரக்கூடிய சக்தி அகத்திக்கீரைக்கு உள்ளதால்தான், குழந்தைகளுக்கும் இந்த கீரையை உணவில் தர சொல்கிறார்கள். இதனால், உடலுக்கும் உறுதியையும், ஆற்றலையும் இக்கீரை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு தருவதானால், இக்கீரையில் சூப் வைத்து தரலாம். இதனால், வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.
50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் அகத்திக்கீரையில்தான் இருப்பதாக சொல்கிறார்கள். வெறும் 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.. அதாவது 10 டம்ளர் பாலிலும், 5 முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, இந்த ஒரே ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளதால், இதை சத்துக்களின் சங்கமம் என்றே சொல்கிறார்கள்.
தோல் ஆரோக்கியம்: தோல் ஆரோக்கியத்தை பேணி காக்கக்கூடியது இந்த அகத்திக்கீரையாகும். தோலில் அரிப்பு, தோல் நோய், சிரங்குகளை விரட்டுகிறது.. இதனை வேக வைத்து, விழுதாக அரைத்து காயங்கள், கட்டிகள் மீது கட்டினால் விரைவில் காயங்கள் ஆறிவிடும். அகத்திக்கீரையை, தேங்காய் எண்ணெய்யில் வதக்கி தேமல்கள் மீது பூசினால் பலன் கிடைக்கும்.. சேற்று புண்களுக்கும் இதனை பூசலாம்..
எப்போதுமே அகத்திக்கீரையை இளசாக வாங்க வேண்டும். சீறிது தேங்காய்ப்பால் ஊற்றி சமைக்கும்போது கசப்பு குறைந்துவிடும். அதேபோல, வாயுத்தன்மை இக்கீரையில் உள்ளதால், பெருங்காயம் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதேபோல, மதிய உணவாக மட்டுமே இக்கீரையை சாப்பிட வேண்டும்...
தவிர்க்கலாம்: மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்ட கீரை என்பதால், சித்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் இக்கீரையை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், மருந்தாக செய்லபட வேண்டியவை, அதற்கு எதிராக திரும்பிவிடுமாம்.. அத்துடன், சொறி சிரங்கு பாதிப்பையும் உடலில் ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்.
சிக்கன் உள்ளிட்ட இறைச்சியுடனும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதைவிட முக்கியமாக, மது அருந்திவிட்டு அகத்திக்கீரை சாப்பிடுவது மாரடைப்பில் கொண்டுபோய் விட்டுவிடுமாம்.
அகத்தி பூக்கள்: அகத்திக்கீரையும், அரிசி கழுவிய தண்ணீரும் கலந்து சூப் போல வைத்து சாப்பிடும்போது, இதயம், மூளை, கல்லீரல், ஜீரணப்பை, வலிமை பெறுகிறது. அகத்திக்கீரையுடன் அதன் பூக்கள், காயையும் கூட பொரியல் செய்து சாப்பிடலாம். அந்த பூக்களை பொரியல் செய்து சாப்பிடும்போது, கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாக போவது போன்ற கோளாறுகள் சரியாகும்.. அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு இதய படபடப்பு கட்டுக்குள் வரும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications