இரவில் ரூம் ஹீட்டர் ஓடுதா? அறையில் ஹீட்டரை யூஸ் பண்ணும்போது, இதெல்லாம் ரொம்ப முக்கியம்.. ஓஹோ
சென்னை: இரவில் ரூம் ஹீட்டர் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா? ரூம் ஹீட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும்? இதுகுறித்து நிபுணர்கள் சொல்வதென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வெயில் காலத்தில் நாம் எப்படி ஏசியை பயன்படுத்துகிறோமோ, அதுபோல இரவில் ரூம் ஹீட்டர்களை பயன்படுத்துகிறோம். ஆனால், ஏசியில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை போலவே, ரூம் ஹீட்டர்களை பயன்படுத்துவதிலும் ஏற்படுகிறது.

ஏசியை குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஓடவிடுவதை போல, கேஸ் ரூம் ஹீட்டர்களையும் குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும்.. மாறாக, நீண்ட நேரம் ஓடிக்கொண்டேயிருந்தால் தீ விபத்துகூட ஏற்படலாம்.
அதேபோல, இரவெல்லாம் ஹீட்டரை ஓடவிட்டால், ரூமுக்குள் கார்பன் மோனாக்சைடு வாயுவின் அளவை அதிகரித்து ஆக்ஸிஜனின் அளவை குறைத்துவிடும். ஆக்ஸிஜன் குறைந்துவிட்டால், சுவாச திணறல் ஏற்பட்டு அது மரணத்தையும் கொண்டுவந்துவிடும். அதாவது தூக்கத்திலேயே மரணம் நிகழலாம்.
ரத்த ஓட்டம்: அத்துடன், மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடும், இதனால், மூளையில் ரத்தக்கசிவு எற்படலாம்.. இதய நோய், பக்கவாதம் உள்ளவர்களுக்கு இது கூடுதல் ஆபத்தை தந்துவிடும். ஹீட்டரை பயன்படுத்துவது மூச்சுத்திணறல் ஏற்பட்டு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் தூசிகள் அதிகமாகி, சுவாச கோளாறுகள், மூச்சுக்குழாய் அழற்சியை உண்டுபண்ணிவிடலாம். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு இது அதிக தொந்தரவை தந்துவிடும்.
அதேபோல, ரூம் ஹீட்டரில் நீண்ட நேரம் இருந்தால், சரும தொந்தரவுகள் ஏற்பட்டுவிடும். சருமம் வறண்டு, அரிப்பு, ஒவ்வொமை வரலாம்.. கண்களும் உலர்ந்து வறட்சியாகிவிடும். அதுமட்டுமல்ல, கார்பன் மோனாக்ஸைடு அதிகமாகிவிட்டால், தலைவலி, தலைச்சுற்றல், வயிற்று வலி, வாந்தி, குமட்டல், பலவீனம் போன்றவை ஏற்படலாம். இப்படி ஏதாவது அறிகுறி தெரிந்தாலே உடனடியாக ஹீட்டரை நிறுத்திவிட்டு, ரூமை விட்டு வெளியே வந்துவிட வேண்டும்.
எப்படி பயன்படுத்தலாம்: எனவே ஹீட்டர் பயன்படுத்தினால், நீண்ட நேரம் ஓடவிடாமல், குறைவான நேரம் மட்டுமே ஓடச்செய்து நிறுத்திவிட வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ஹீட்டர் அருகில் வைக்கக்கூடாது. குழந்தைகள், வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடமிருந்து ஹீட்டரை தூரமாக விலக்கி வைக்க வேண்டும். ரூமில் ஹீட்டர் ஓடும்போது, கண்டிப்பாக பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். இதனால் தோல், கண்கள் வறட்சியால் ஈரப்பதம் காக்கப்படும்.
ஏசியை எப்படி அடிக்கடி சர்வீஸ் செய்கிறோமோ, அதுபோல ரூம் ஹீட்டரையும் முறையாக பராமரித்து, சர்வீஸ் செய்ய வேண்டும்.. சரியாக பராமரிக்கப்படாவிட்டால், அது அதிக வெப்பமடைந்து நெருப்பு எரியும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்...
அதேபோல, ஹீட்டர் பக்கத்தில், ஸ்கிரீன்கள், படுக்கைகள் , பர்னிச்சர்கள் போன்றவற்றையும் வைக்கக்கூடாது. எப்போதுமே ஹீட்டர் மற்றும் எந்தவொரு பொருளுக்கும் இடையே குறைந்தபட்சம் 3 அடி இடைவெளி இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
ஆபத்து தவிர்க்கலாம்: அறைக்குள் சரியான காற்றோட்டத்தை இருக்குமாறு செய்ய வேண்டும். புகை வெளியிடுவதற்கு சரியான காற்றோட்டம் இருந்தாலே பாதி ஆபத்து தவிர்க்கலாம். ரூம் ஹீட்டரில் தெர்மோஸ்டாட் அல்லது டைமர் ஆப்ஷன் இருந்தால், அதை பயன்படுத்தலாம். இதனால், அதிக வெப்பத்தை அறைக்குள் கட்டுப்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications