செக்ஸுக்கு பிறகு வாந்தி வர்ற மாதிரி இருக்கா? அதுதான் பெரிய பிரச்சனையே.. டாக்டர்கள் தரும் புது அட்வைஸ்
செக்ஸுக்கு பிறகு, குமட்டல் உணர்வு ஏற்படுவது குறித்து மருத்துவர்கள் புதிய விளக்கம் ஒன்றை தந்துள்ளார்கள்
சென்னை: உடலுறவுக்கு பின்னர் உடனே வாந்தி வருவதை போல சில பெண்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் இதனை சாதாரண ஒன்று என கடந்துவிட வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற உடல் உறவு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் அன்றாடம் நோய்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். இது பாலியல் சம்பந்தமான பிரச்னைகளை பலருக்கு ஏற்படுத்துகிறது. இவ்வாறு பிரச்னை உள்ளோர் பிரச்னை குறித்து வெளிப்படையாக பேசவோ, சிகிச்சை எடுத்து கொள்ளவோ தயங்குகிறார்கள். நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல பாதிப்புகள் மேலும் அதிகரித்து கொண்டேதான் இருக்குமே தவிர குறைந்துவிடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு பரவும் பரவலான செக்ஸ் பாதிப்புகளில் ஒன்றுதான் செக்ஸ்க்கு பிறகான குமட்டல் உணர்வு. உடலுறவு முடித்த பின்னர் வாந்தி வருவதை போல இருந்தல் என்பது ஒரு வகையான நோய்க்கான அறிகுறியாகும். எனவே இதனை தவிர்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

காரணம்
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு, "செக்ஸ் முடித்த பின்னர் வலி மற்றும் குமட்டல் உணர்வுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டியது அவசியமாகும். கருப்பை சுருங்கி இருந்தால் இது போன்று ஏற்படும். இது தவிர இயல்புக்கு மீறிய நீண்ட நேர செக்ஸ் அல்லது மிகவும் கொடூரமான செக்ஸ் அதாவது பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் இது போன்று வலி ஏற்படுவது இயல்பானதுதான். நாங்கள் சொல்வது இந்த சூழலை தவிர சாதாரண சூழலில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பொருந்தும்.

பலாத்காரம்
எனவே இப்பெண்கள் உடனடியாக தங்கள் துணையிடம் இது குறித்து கலந்து பேச வேண்டும். கருப்பை சுருக்கம் தவிர 'வாகஸ் நரம்பு' பாதிக்கப்பட்டாலும் இதுபோன்ற குமட்டல் உணர்வு ஏற்படும். கண்களில் தொடங்கி அடி வயிறு வரை நீண்டுள்ள இந்த வாக்ஸ் நரம்பு தூண்டப்படும் போது குமட்டல் ஏற்படும். செக்ஸ்க்கு முன்னர் ஃபோர்பிளேவை அனைவரும் விரும்புவார்கள். இந்த முன் விளையாட்டின்போது முத்தம் கொடுத்தல், உடல் உறுப்புக்களை தொடுதல் போன்றவை நடக்கும். எனவே இந்த சமயத்தில் வாக்ஸ் நரம்பு தூண்டப்படும். ஆனால் செக்ஸ் மனநிலையில் இருக்கும் போது உங்களால் வாந்தி வருவதை எளிதில் உணர முடியாது.

வாக்ஸ் நரம்பு
எனவே செக்ஸ் முடிந்துபோனதும் உடல், மனம் இரண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதும் குமட்டல் உணர்வு தெரியவரும். இதுவும் இல்லையெனில் வேறு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது பால்வினை நோய்கள் காரணமாகவும் இது போன்று குமட்டல் ஏற்படலாம் எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானதாகும். பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டால் குமட்டல் மட்டுமல்லாது காய்ச்சல், குளிர், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இது தவிர சென்ட், ரூம் ஸ்பிரே போன்றவற்றாலும் வாந்தி வர வாய்ப்பிருக்கிறது.

மனச்சோர்வு
மேலும், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பாலியல் தாக்குதல்களை சமீபத்தில் எதிர்கொண்டிருந்தாலும் இது போன்று குமட்டல் ஏற்படும். கடைசியாக 'பாலியல் வெறுப்பு கோளாறு' எனும் ஒரு வகை பாதிப்பு இருக்கிறது. இந்த பாதிப்பை எதிர்கொண்டிருப்பவர்களுக்கும் குமட்டல் வரலாம். ஆகவே எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது ஆகச்சிறந்தது" என்று கூறியுள்ளனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications