மது குடிப்பதால் இப்படியொரு நன்மையா! புட் பாய்சனிங் பிரச்சினை தீருமா! மருத்துவர்கள் சொல்வது என்ன
சென்னை: இப்போது வெளியே உணவகங்களில் சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி வெளியே உணவு சாப்பிடும் போது புட் பாய்சனிங் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் வயிற்று வலி ஏற்படும் போது மது குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மை தானா.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
வீக் எண்டில் மது குடிப்பது என்பது இப்போது இளைஞர்களிடையே வழக்கமான ஒன்றாகிவிட்டது. இரவு மது குடித்த பிறகு அதிகமாகச் சாப்பிட்டால் ஹேங்கொவர் ஏற்படாது என்று நண்பர்கள் சொல்லிக் கேட்டு இருப்போம்.

மது குடிப்பது: ஆனால், இது உண்மை தானா.. நிஜமாகவே மதுக் குடிக்கும் போது அதிகம் சாப்பிட்டால் ஹேங்கோவர் குறையுமா என்று கேட்டால்.. அது உண்மை இல்லை என்பதே பதில். மது குடித்துவிட்டு சாப்பாடு அதிகம் சாப்பிட்டால் ஹேங்கோவர் ஏற்படாது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதற்கிடையே இப்போது இணையத்தில் மற்றொரு விஷயம் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது புட் பாய்சன் காரணமாக வயிற்று வலி ஏற்படும் போது மது குடித்தால் வயிற்று வலி பறந்து போகுமாம். இதை இப்போது பலரும் முயன்று பார்க்கிறார்கள். இதாவது உண்மை தானா.. இல்லை மது குடிக்க இளைஞர்கள் கண்டுபிடித்த காரணமாக இது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மருத்துவர்கள் சொல்வது என்ன: இது குறித்து காஸ்ட்ரோஎன்டாலஜி மருத்துவர் கூறுகையில், "மோசமான உணவால் புட்பாய்சன் ஏற்படும் போது மது அருந்தினால் அது சரியாகிவிடும் என்ற கருத்து இங்குப் பரவலாக இருக்கிறது. வெளியே சென்று வந்தால் நாம் உபயோகிக்கும் சானிடைசரில் ஆல்கஹால் இருக்கிறது. அதுவே பாக்டீரியாக்களைக் கொல்கிறது என்றால் மதுவும் நிச்சயம் பாக்டீரியாக்களை கொல்லும் என்பதால் சிலர் இதைச் செய்கிறார்கள்.
வாய்ப்பே இல்லை: ஆனால், இதுபோல எல்லாம் நடக்காது. ஏனென்றால் நாம் உணவைச் சாப்பிட்ட உடன் அது வயிற்றுக்குச் சென்றுவிடும். அங்கு வயிற்றில் நிலவும் சூழல் முற்றிலும் வேறு.. இங்கு வெளியே பாக்டீரியாக்களை ஆல்கஹால் அழிக்கிறது தான். ஆனால், வயிற்றுக்குள் அப்படி நடக்காது. புட் பாய்சனை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளை இதன் மூலம் எல்லாம் அழிக்க முடியாது.
உண்மை சொல்லப் போனால் உடம்பு நன்றாக இல்லாத போது மது குடித்தால் அது உடலில் ஏற்பட்ட பாதிப்பை மோசமாகவே மாறும். மது குடித்தால் வயிற்று வலி அல்லது புட் பாய்சனிங் குறையும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. எனவே, இதையெல்லாம் செய்து பார்க்காதீர்கள். மேலும், சானிடைசரில் இருக்கும் ஆல்கஹால் வேறு.. நாம் குடிக்கும் மதுவில் இருக்கும் ஆல்கஹால் வேறு. மேலும், ஆல்கஹால் நமது இரைப்பைக் குழாயை எரிச்சலடையச் செய்யும். இதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அதிகரிக்கவே செய்யும்" என்றார்.
என்ன செய்யலாம்: எனவே, திடீரென உடல்நிலை பாதிப்பு எதாவது ஏற்பட்டால் மருத்துவரைச் சென்று பாருங்கள். அதைவிட்டுவிட்டு மது குடிக்கிறேன், வீட்டு வைத்தியம் பார்க்கிறேன் என்று விபரீதங்களைத் தேடிப் போக வேண்டும்.
மேலும், வெளியே சாப்பிடப் போகும் போது நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். ஹாஃப் பாயில் போன்ற உணவுகளை முழுமையாகத் தவிருங்கள். மேலும், சாப்பிடும் முன்பு கை கழுவுவது போன்ற அடிப்படை விஷயங்களைப் பின்பற்றினாலே இதை எல்லாம் நாம் தடுக்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications