கடகடன்னு வெயிட் குறைக்கணுமா? அப்ப இதை ட்ரை பண்ணுங்க.. ஆமா, முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?
சென்னை: சூப்பர் புட் என்று சொல்லப்படும் உலர் பழங்கள் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா? உடலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சேர்வதை தடுக்க உலர் பழங்கள் பெஸ்ட் சாய்ஸ் என்கிறார்கள்.. எப்படி தெரியுமா?
உடல் எடை குறைய என்ன செய்யலாம் என்பதைவிட, என்னென்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருப்பது அதைவிட அவசியமாகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உலர் பழங்கள் வெகுவாக கைகொடுத்து உதவுகின்றன.

பிஸ்தா: இதில், பிஸ்தாவை எடுத்து கொண்டால், ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளதுடன், உடலுக்கு ஆற்றலை தரக்கூடியவையாகும்.. நம்முடைய சீரான செரிமானத்திற்கு இந்த பிஸ்தா துணைபுரிகிறது.. இதனால், சாப்பிட்ட பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தாது. இதுவும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
முந்திரி பருப்புகளை எடுத்து கொண்டால், 70 சதவீதம் மெக்னீசியம் இருப்பதுதான் இதன் சிறப்பாகும்.. உடலில் கொழுப்பு கார்போஹைட்ரேட் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் தன்மையை கொண்டிருப்பதால், உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது.. வைட்டமின் C, தயாமின், விட்டமின் B6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் இதில் உள்ளன.
முந்திரி பருப்புகள்: பெண்கள் ஒரு அவுன்ஸ் அதாவது 4 கிராம் அல்லது 10% அளவு தினமும் முந்திரி சாப்பிட்டு வரும்போது, பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
அதேபோல பாதாம் பருப்புகளையும் சொல்லலாம்.. கொலஸ்ட்ராலை சீராக்கும் சக்தி இந்த பாதாம்களுக்கு உண்டு. இதில் கலோரிகள் குறைவாக உள்ளன.. அதாவது ஒரு கைப்பிடி பாதாமில் கிட்டத்தட்ட 500 கலோரிகள் உள்ளன..
எனவே, தினமும் 6 அல்லது 7 பாதாம் பருப்புகளை சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான புரோட்டீன், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் போன்ற அத்தனை சத்துக்களையும் பெற்று கொள்ளலாம்.
உலர் திராட்சை: உலர் திராட்சையை பொறுத்தவரை, உடலுக்கு அதிக நன்மையை தரக்கூடியது.. 100 கிராம் உலர் திராட்சையில் ஒரு கிராமுக்கும் குறைவாகவே கொழுப்பு உள்ளது... கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால், உடல் எடை குறைப்போருக்கு சிறந்த தேர்வாக உள்ளது....
கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் கிடையாது என்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
கெட்ட கொழுப்பு: வால்நெட் பருப்புகளை பொறுத்தவரை, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆல்பா-லினோலெனிக் அமிலம் , நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன... நல்ல கொழுப்புகளை உடலில் எடுத்து கொண்டாலே, கெட்ட கொழுப்புகள் குறைந்துவிடும். இதனை காலையில் சாப்பிடுவது நல்லது. வால்நட் பருப்புகளை வறுத்து பொடியாக்கி சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications