இவங்களுக்கெல்லாம் சீதாப்பழம் நல்லதா? சீதாபழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? இதென்ன புதுஸா? சூப்பர்
சென்னை: அனைத்து பழங்களுமே நன்மைதரக்கூடியது என்றாலும், அனைவருக்குமே அனைத்து பழங்களும் ஏற்புடையதல்ல.. இதில் முக்கியமானது சீத்தாபழம். இந்த சீதாபழத்தினை யாரெல்லாம் சாப்பிடலாம்? யாரெல்லாம் தவிர்க்கலாம் தெரியுமா? சீதாப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?
சீதாபழத்தில், வைட்டமின் B, C, மக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஊட்டச்சத்தும், கனிமச்சத்தும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ள சீதாப்பழங்கள் குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது. இதய செயல்பாட்டையும் சீர்செய்கிறது..

யார் சாப்பிடலாம்: முக்கியமாக ரத்தசோகை இருப்பவர்களுக்கு சீதாப்பழம் வரப்பிரசாதம் எனலாம்.. சீதாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச் சத்து இந்தப் பிரச்சனைகளைத் தடுக்கிறது. வல்லாரை கீரை போலவே, இந்த சீதாப்பழங்களை சாப்பிட்டு வரும்போது, நினைவுத்திறன் அதிகரிக்கும் என்கிறார்கள். அதனால், வளரும் குழந்தைகள், இந்த பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
மூட்டு வலி: மூட்டு, முழங்கால் பிரச்சனை இருப்பவர்கள், இந்த பழத்தினை சாப்பிடுவதால், உறுதித்தன்மையை பெறலாம். காரணம், சீதாப்பழங்களில் மக்னீசிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் தடுக்கின்றன.. அத்துடன் தசைகளின் பலவீனத்தையும் சரி செய்கிறது.. மூட்டுகளில் ஏற்படும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாத நோய்களும் நீங்குவதால், வாத நோய்களை தீர்ப்பதில் சீதாபழத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
அசிடிட்டி, அல்சர் தொந்தரவு இருந்தால், வெறும் வயிற்றில் சீதாபழத்தினை சாப்பிடலாம். இதனால் வயிறு புண்கள், அல்சர் புண்கள், வாய்ப்புண்கள் ஆறும்.. தேவைப்பட்டால், சிறிது வெந்தயத்தை ஊறவைத்து, சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிடும்போது, விரைவில் நிவாரணம் கிடைக்கும்..
பித்தம்: சீதாபழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு சேர்ந்து சாப்பிடும்போது, உடலிலுள்ள பித்தம் நீங்கும். சரும வறட்சியை சீராக்கி, மன அழுத்தத்தையும் போக்குகிறது.. கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இதனை பழமாக சாப்பிடலாம், காயாக சாப்பிடலாம். இதனால், கண்கள், நரம்பு, சம்பந்தமான பிரச்சனை தீரும்.
அதேபோல, பிசிஓடி பிரச்சனைகள் இந்த பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து கிடைப்பதுடன், சோர்வு, எரிச்சல் போன்ற உணர்வுகளை எதிர்த்து போராடவும் இப்பழம் உதவுகிறது. அத்துடன் கருவுறுதலையும் மேம்படுத்துகிறது.
எடை கூடுமா: சீதாப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? என்ற சந்தேகம் உண்டு.. இந்த பழத்தை பொறுத்தவரை, கொழுப்பு மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
100 கிராம் சீதாபழத்தில் 94 கலோரிகள் இருக்கின்றன.. எனவே, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிடும்போது, கொலஸ்ட்ரால் உடலில் சேர்வது குறையுமாம்.. முககியமாக வைட்டமின் B நிறைய உள்ளது.. இது வீக்கத்தைக் குறைப்பதில், கொழுப்பை கரைப்பதில் மிகப்பெரிய வேலையை செய்கிறது.
யாரெல்லாம் தவிர்க்கலாம்: சீதாப்பழம் நன்மைதான் என்றாலும், சருமப் பிரச்சினை உள்ளவர்கள் சீதாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.. உணவு அழற்சி பிரச்சனை இருப்பவர்களும், சருமத்தி்ல் அலர்ஜி, சொரியாசிஸ் பிரச்சினை இருப்பவர்களும் சீதாப்பழம் தவிர்ப்பது நல்லது. அதேபோல செரிமான பிரச்சினை இருந்தாலும், சீதாப்பழத்தை சாப்பிடக் கூடாது.
நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளதால், வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். இரும்புச்சத்தும் அதிகம் என்பதால், குமட்டல், வாந்தி வரலாம். எனவே, யாராக இருந்தாலும் அளவுடன் சாப்பிட வேண்டும்.. இதிலுள்ள விதைகளைத் தெரியாமல்கூட விழுங்கிவிடக்கூடாது.












Click it and Unblock the Notifications