"அது" கூட பிரச்சனை.. கருவுறுதலுக்கு ஆபத்து? விந்தணு பாதிக்கிறதா?.. இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் பகீர்
சென்னை: இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்று சொல்லப்படும், உடல் எடையை குறைக்கும் "டயட்டிங்" முறை குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. என்ன அது?
உடல் எடையை குறைப்பதில் எத்தனையோ வழிவகைகள் உள்ளன. அதேசமயம், எந்த டயட்டாக இருந்தாலும் சரி, அது ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஏற்றபடி தான் தேர்வு செய்ய வேண்டும்..
இது இன்டர்மிட்டண்ட் டயட்டுக்கும் பொருந்தும். அதில் ஒன்றுதான், இன்டர்மிட்டண்ட் டயட் என்பதாகும்.. இந்த டயட்டில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பின்பற்றும் உணவு இடைவெளி நேரமும், நேரமும் தேர்வு செய்வது தான்.
இன்டர்மிட்டண்ட் டயட் இருக்கும்போது, நாம் வழக்கமாக பின்பற்றும் உணவு இடைவெளி நேரம் (food window time) 16 - 8 என்கிற நேர இடைவெளி என்று வைத்துக் கொண்டால், அந்த 8 மணி நேரத்துக்குள் என்ன வகை உணவுகளை வேண்டுமானாலும் நம்முடைய விருப்பப்படி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.

சமச்சீர் உணவு : அந்த கால இடைவெளி என்பது நம்முடைய உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்யவும் மெட்டபாலிசத்தை தூண்டவும், ஜீரண மண்டலத்தை சீராக வைத்திருக்கவும் உதவி செய்வதே தவிர, ஆரோக்கியமற்ற, ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது பொருளல்ல.. உங்களுடைய 8 மணி நேர உணவு இடைவேளையின்போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நிச்சயம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சமச்சீர் உணவுகளாக தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்-கில் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகமாகும்... அதாவது நம் உடலில் தேவையில்லாமல் இருக்கும் தசைகள் அனைத்தும் கலோரியாக மாறுகிறது.. இதன்காரணமாக உடல் எடை குறைகிறது.. நாம் சாப்பிடுற 2 வேளை உணவு முழுமையா ஜீரணமாகி, அதோட கழிவுகளும் முழுமையா வெளியேறிய பிறகு தான், அடுத்த உணவை எடுத்து கொள்ள நேரிடுகிறது.. இதனால், தேவையில்லாத கொழுப்புகள் உடம்புல தங்காது. அத்துடன், நம் உடலில் இருக்கும் பிரச்சனைகளை தானே அடையாளம் கண்டு, தானே சரி செய்து கொள்ளும்..

சிறுநீரக கற்கள்: இந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது நிறைய பேருக்கு பலன் தரக்கூடியது, பாதுகாப்பானது தான்... ஆனால் அது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலனை தான் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது.. கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள், இரைப்பை மற்றும் உணவுக்குழாய் ஆசிட் ரிஃப்ளக்ஸ், நீரிழிவு நோய், உணவுக் கோளாறுகள், குறைவாக எடை உடையவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள் ஆகியோர் இந்த இன்டர்மிட்டண்ட் டயட்டை பின்பற்றுவதற்கு முன் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், இன்டர்மிட்டண்ட் டயட் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த இன்டர்மிட்டண்ட் விரதமானது, கருமுட்டை, விந்தணுக்களின் தரத்தை பாதித்து, கருவுருதலுக்கே கேடு விளைவிக்கும் என்று அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கைகள் வெளியாகி உள்ளன.. இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்..
உஷார் உஷார்: இது உடல்நலனை எடையை குறைக்க உதவுவதாக சொன்னாலும்கூட கருமுட்டை மற்றும் விந்தணு தரத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.. சமீபத்தில் இந்த ஆராய்ச்சியை வரிக்குதிரை, மீன்களை வைத்து நடத்தப்பட்டுள்ளதில், இது நிரூபணமாகி உள்ளது.. எனினும், இது மனிதர்களோடும் ஒத்துப்போகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications