பாதங்களில் எண்ணெய் தேய்த்து பாருங்க.. இரவு தூங்கும் முன் இதை செய்தாலே போதும்.. சூப்பரா தூக்கம் வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய முழுமையான ஆரோக்கியமே, நம்முடைய நிம்மதியான தூக்கத்தை வைத்துதான் அமைகிறது.. அந்தவகையில் தூக்கம் எந்த அளவுக்கு அவசியம் தெரியுமா? நிம்மதி தூக்கத்திற்கு இதோ சில டிப்ஸ்கள்.

தூக்கம் பாதிக்கப்படுவதால், தேவையில்லாத மன உளைச்சல் , அஜீரணம், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.. அதனால், தூங்க செல்லும்முன்பு சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

Does nighttime Exercise help you sleep better and Best tips for a Good sleep at night things not to do before sleep

ஓய்வு: எப்போதுமே தூங்குவதற்கு முன்பேயே கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். தூங்கும்முன்பு, கம்ப்யூட்டர், டிவி, செல்போன், டேப்லெட் இப்படி எல்லாவிதமான எலக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. இதிலிருந்து வெளியாகும், "நீல ஒளி8" மூளையை களைப்படைய வைத்துவிடுவதுடன், இரவு தூக்கத்தையும் தடைசெய்துவிடும்.

தூங்கும்போது காபி குடிக்கக்கூடாது.. காஃபின் நிறைந்த பானங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், சாக்லேட்டுகள் போன்றவை தூக்கத்தை வரவழைப்பதற்கு பதிலாக, விழித்திருக்க வைத்துவிடுமாம்.

சிறுநீர்: குறிப்பாக, தூங்குவதற்கு முன்பு, அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது.. அப்படி குடித்தால், சிறுநீர் கழிக்க அடிக்கடி எழ வேண்டியிருக்கும்.. இதனால் தூக்கம் பாதிக்கப்படும்.. அதற்காக சிறுநீர் கழிக்காமலும் இருக்கக்கூடாது.. இதனால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.. எனவே தண்ணீரை தூங்கும் நேரத்தில் குடிக்க கூடாது. 8 மணிக்குள்ளேயே குடித்து முடித்துவிடுவது சிறந்தது என்கிறார்கள.

அதேபோல, சிலருக்கு மதியம் தூங்கும் பழக்கம் இருக்கும்.. இப்படி மதியம் தூங்குபவர்களுக்கு இரவில் தூக்கம் சரியாக வராது.. மதியம் தூங்குவதைவிட, இரவு தூங்குவதுதான் முழு ஆரோக்கியமாகும்.. அதுமட்டுமல்ல, குட்டி தூக்கம் என்றாலும் உடல் எடை அதிகமாகிவிடும்.. எனவே, குட்டி தூக்கத்தை மதியம் தவிர்த்தாலே, இரவு நன்றாக தூக்கம் வரும்.

உடற்பயிற்சி:
அதேபோல, ஒருசிலர் காலை நேரம் செய்ய தவறி, உடற்பயிற்சிகளை இரவு நேரம் செய்வார்கள.. இரவில் உடற்பயிற்சி செய்வதும் உடலை சுறுசுறுப்படைய செய்து, தூக்கத்தை தடுத்துவிடும்.. ஒருவேளை இரவில் உடல்பயிற்சி செய்வதாக இருந்தால், தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பேயே முடித்துவிட வேண்டுமாம்.

நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டுமானால், இரவு தூங்க போவதற்கு முன்பு, கால் பாதங்களில், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்..

நல்ல தூக்கம் : சோம்பு தண்ணீர் அல்லது சோம்பு டீ தயாரித்து குடித்தால், உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும். மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை சோம்பு தண்ணீர் தரும்.

தூங்கும் நேரத்தில், தியானம், மூச்சு பயிற்சி செய்யலாம்.. அல்லது பிடித்த புத்தகங்களை படிக்கலாம்.. இனிமையான பாட்டு கேட்லாம்.. அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசிக்கொண்டிருக்கலாம். இப்படி மனதுக்கு பிடித்ததை செய்யும்போது, மன அழுத்தம் நீங்கி, நிம்மதி தூக்கம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+